சுவிஸ் வாழ் அனைத்து தமிழ் மக்களையும் ஒன்றிணைத்து, "வேரும் விழுதும் -2018" கலைமாலை விழா..! (அறிவித்தல்)
சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியம், "சுவிஸ் வாழ் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து", எதிர்வரும் 17.03.2018 அன்று சனிக்கிழமை மதியம் இரண்டு மணிக்கு, “வேரும் விழுதும் 2018” கலைமாலை விழா (ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்) மற்றும் "விழா மலர்" வெளியீட்டு நிகழ்வானது சூரிச் வரசித்தி மஹால் மண்டபத்தில் (Varasithy Mahall, Hütenwiesen str-6, 8101 Dallikön -ZH) நடைபெறவுள்ளது.
இளையோர்களின் "ஹிப் ஹாப்" நடனங்கள், நாட்டியங்கள், "சுவிஸ்ராகம்" கரோக்கி இசைக்குழுவின் இன்னிசை நிகழ்வு, பட்டிமன்றம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள்.. "ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாக" நடைபெற உள்ளது.
அத்துடன் இலங்கை மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து கலந்து கொள்ளும், முக்கிய பிரமுகர்களின் முன்னிலையில் "வேரும் விழுதும்-2018 விழாமலர்" வெளியீடும் நடைபெற உள்ளது.
காலம் & நேரம்:- 17.03.2018 அன்று சனிக்கிழமை மதியம் இரண்டு (14.00) மணிக்கு ,
இடம்:- சூரிச் வரசித்தி மஹால் மண்டபத்தில் (Varasithy Mahall, Hütenwiesen str-6, 8101 Dallikön -ZH
"அனைவரும் வருக, ஆதரவு தருக" (அனுமதி இலவசம்)
No comments
Post a Comment