Latest News

January 30, 2018

அமெரிக்கா மீது வடகொரியா அணு ஆயுத தாக்குதல்! சி.ஐ.ஏ எச்சரிக்கை
by admin - 0

இன்னும் சில மாதங்களில் வடகொரியா, அமெரிக்கா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த கூடும் என அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏ எச்சரிக்கை விடுத்துள்ளது.


இது குறித்து சி.ஐ.ஏ வின் தலைவர் பாம்பியோ கருத்து தெரிவிக்கையில், “அமெரிக்கா மற்றும் வடகொரியாவிற்கு இடையிலான மோதல் வலுபெற்றுள்ளது.

இந்நிலையில், வடகொரியாவின் அச்சுறுத்தலுக்கு இராணுவத்தைக் கொண்டு நடவடிக்கை எடுத்தால் எவ்விதமான பிரச்சினை ஏற்படும் என்பதை ஜனாதிபதி ட்ரம்பிடம் தெரிவித்துள்ளோம்.

வடகொரியா மீது இராணுவ நடவடிக்கை எடுத்தால் ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட அமெரிக்க ஆதரவு நாடுகளில் மனித உயிரிழப்புகள் மிக மோசமான அளவில் இருக்கும்.

வடகொரிய ஜனாதிபதி கிம்மை பதவியில் இருந்து அகற்றினாலோ அல்லது அமெரிக்கா மீது அணு ஆயுதம் ஏவும் திறனை கட்டுபடுத்தினாலோ ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம்.

இன்னும் சில மாதங்களில் அமெரிக்கா மீது வடகொரியா அணு ஆயுத தாக்குதல் நடத்தகூடும். இது எங்களுக்கு கவலையளிக்கின்றது.

வடகொரிய ஜனாதிபதி குறித்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடுமையான வார்த்தைகளை உபயோகித்து வருகின்றார். அது வடகொரியாவின் காதில் விழவில்லை.

இந்த வார்த்தைகள் மூலம் அமெரிக்கா மிகவும் கோபமாக உள்ளது என்பதை வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் புரிந்து கொள்ள வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-tamilwin-



« PREV
NEXT »

No comments