அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட நாள் முதல் தினகரன் ‘சிலீப்பர் செல்’ என்கிற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தி வந்தார். அ.தி.மு.க.வில் எனக்கு ஆதரவாக பல எம்.எல்.ஏ.க்கள் சிலீப்பர் செல்களாக உள்ளனர். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் என் பக்கம் வருவார்கள் என்று கூறி இருந்தார்.
ஆர்.கே.நகர் தேர்தலில் நான் வெற்றிபெற்று சட்ட சபைக்குள் செல்வேன். அப்போது ‘சிலீப்பர் செல்’ எம்.எல்.ஏ.க்கள் என்னை ஆதரிப்பாளர்கள் என்றும் கூறி இருந்தார். இதனால் ஆர்.கே.நகர் தேர்தலுக்கு பின்னர் தமிழக அரசியல் களத்தில் அதிரடி மாற்றம் நிகழுமா? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றார். இதையடுத்து அவரை அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சிலர் சந்திக்க உள்ளனர்.
மூத்த அமைச்சர்கள் சிலரை தவிர மற்ற அமைச்சர்களும், எம்எல்ஏக்கள் அனைவரும் தினகரனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தப்படி இருக்கிறார்கள். இவர்களில் பலர் இன்று தினகரனை இரவு நேரில் சந்தித்து பேசவும் திட்டமிட்டுள்ளனர். கட்சியும், ஆட்சியும் தினகரன் பக்கம் செல்வதற்கு வாய்ப்பு அதிகரித்திருப்பதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments
Post a Comment