Latest News

December 05, 2017

100 KM வேகத்தில் பலத்த காற்று வீசும்! பொது மக்களுக்கு எச்சரிக்கை
by admin - 0

இலங்கையில் ஏற்படவுள்ள காலநிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தம் தாழமுக்கமாக விருத்தி அடைந்து வருவதால், இலங்கையில் பாதிப்பு ஏற்படும் என அறிவுறுத்தப்பட்டது.



இந்நிலையில் 100 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் திணைக்களம் இன்று எச்சரித்துள்ளது.

வடக்கு கிழக்கு கடல் பகுதி கடும் கொந்தளிப்புடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் 8ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு கடல் பிரதேசங்களில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதனை தவிர்க்குமாறு திணைக்களம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


இந்த அழுத்தம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனால் வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் காற்றின் வேகம் மணிக்கும் 90 - 100 கிலோ மீற்றர் வேகத்தில் வளர்ச்சியடையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடாவில் விருத்தியடையும் தாழமுக்கம் தீவிரமடைந்த நிலையில் இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் தமிழகத்தின் ஆந்திரா பகுதி ஊடாக பயணிக்கும் என திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

« PREV
NEXT »

No comments