யாழ்.மணியந்தோட்டம் பகுதியில் இளைஞர் ஒருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விசேட அதிரடிப்படையின் உதவி காவற்துறை அதிகாரி நிலாந்த மற்றும், கான்ஸ்டபிள் புஸ்பகுமார் ஆகியோரை குற்ற விசாரணைப் பிரிவினர் இன்று கைது செய்துள்ளனர்.
கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கி, முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் அண்மையில் சிறப்பு அதிரடிப் படையினரின் முகாமில் இருந்து மீட்கப்பட்டிருந்தது.
இதையடுத்து விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் இன்று சிறப்பு அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சிறப்பு அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 7 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்ட நிலையிலி இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இவர்களை இன்று நீதிமன்றில் முன்னிவைப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
விளக்கமறியலில் வைக்க உத்தரவு
யாழ்.மணியந்தோட்டம் பகுதியில் இளைஞர் ஒருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி இருவரையும் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். சதீஸ்கரனின் இல்லத்தில் இவர்களை முன்னிலைப்படுத்திய போது இந்த உத்தரவை நீதவான் பிறப்பித்துள்ளார்
No comments
Post a Comment