Latest News

November 09, 2017

ஜெயா டிவி அலுவலகம் உட்பட 190 இடங்களில் 8 மணி நேரத்துக்கு மேல் ஐடி அதிகாரிகள் அதிரடி சோதனை!
by admin - 0

ஜெயா டிவி
சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஜெயா டிவி அலுவலகம் உட்பட 190 இடங்களில் இன்று காலை முதல் 8 மணிநேரத்துக்கும் மேல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரால் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். சென்னை ஈக்காட்டுதாங்கலில் ஜெயா டிவி அலுவலகம் உள்ளது. இங்கு இன்று காலை 6 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

வரி ஏய்ப்பு புகாரைத் தொடர்ந்து அதிகாரிகள் குழு சோதனை நடத்தி வருகிறது. ஜெயா டிவி சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. பெங்களூரு சிறையில் இருக்கும் இளவரசி மகன் விவேக்தான் இதை நிர்வகித்து வருகிறார். மேலும் விவேக் நிர்வகித்து வரும் நமது எம்ஜிஆர் பத்திரிகை, அவருக்கு சொந்தமான ஜாஸ்சினிமாஸ் ஆகியவற்றிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்ரனர்.

சென்னை, பெங்களூரு, மன்னார்குடி, தஞ்சாவூர் மற்றும் கொடநாட்டில் மொத்தம் 190 இடங்களில் இந்த அதிரடி சோதனை நடைபெறுகிறது. சுமார் 8 மணிநேரத்துக்கும் மேல் இச்சோதனை நீடிக்கிறது.


« PREV
NEXT »

No comments