பிரித்தானியாவில் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக புலம்பெயர் தமிழர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்த போராட்டம், பிரித்தானிய பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக இன்றைய தினம்(22) நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, அரசியல் கைதிகளை உடன் விடுவிக்க வேண்டும், இராணுவம் அபகரித்து வைத்திருக்கும் மக்களின் காணிகளை மீள கையளிக்க வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான உண்மைகளை வெளியிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்த மகஜர் ஒன்றும் பிரித்தானிய பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், தமது கோரிக்கைகளை வெளிப்படுத்த வேறு வழிகள் எதுவும் இல்லாமல் அரசியல் கைதிகளாக இருக்கின்ற எமது உறவுகள் போராடி கொண்டிருக்கின்றனர்.
ஆனாலும், இலங்கை அரசாங்கம் இதுவரை சரியான பதிலை வழங்கவில்லை. இவ்வாறு இழுத்தடிப்பைத் தொடர்வதன் மூலம் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகள் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாக உள்ளதையும் அவர்கள் வெளிப்படுத்தினர் . அத்துடன் தமிழீழ கோஷங்களையும் தமிழர்களின் தலைவர் மேதகு வே. பிரபாகரன் என்ற கோஷங்களை எழுப்பி போராட்டத்தை முன்னேடுத்தமை குறிப்பிடத்தக்கது
No comments
Post a Comment