Latest News

October 10, 2017

லண்டனில் – தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி நினைவு வணக்க நிகழ்வும்!
by admin - 0

லண்டனில் – தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி நினைவு வணக்க நிகழ்வும்!




முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி நினைவு வணக்க நிகழ்வும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வும் பிரித்தானியாவில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந் நிகழ்வு நாளை 10-10-2017 செவ்வாய்க் கிழமை மாலை 6;00 மணி முதல் இரவு 9:00 மணி வரை வடமேற்கு லண்டன் பகுதியில் 306 Dollis Hill Lane, London, NW2 6HH எனும் முகவரியில் அமைந்துள்ள Maharastra Maddal மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

முதல் முறையாக பெண்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட நிகழ்வாகவும், அதிகளவான பெண்கள் கலந்து கொள்ளும் சிறப்பு எழுச்சி நிகழ்வாகவும் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் லண்டன் வாழ் தமிழ் மக்களை அதிகளவில் வந்து கலந்து சிறப்பிக்குமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாவீரர் போராளிகள் குடும்ப நலன் பேணூம் அமைச்சின் கீழ் இயங்கும் நிகழ்வு ஏற்பாட்டுக் குழு வேண்டிக்கொண்டுள்ளது.



அனைத்தையும் துறந்து மக்களின் நலனுக்காகவும், மண்ணின் விடுதலைக்காகவும் உயிர்களை தியாக செய்து மாவீரர்களாக வித்தாகி வீழ்ந்த எம் உறவுகளுக்காக அன்றைய தினமே சில மணித்துளிகளை ஒதுக்குவோம், அவர்களுக்கான அஞ்சலிகளை  செய்து உறுதியேற்று அவர்கள் கண்ட கனவை நனவாக்க உறுதிகொண்ட மக்களாய் பயனிப்போம்.
« PREV
NEXT »

No comments