தமிழரசு கட்சி தமிழினத்துக்கு மிகப்பெரிய துரோகம் இழைத்துள்ளது-சட்டத்தரணி சுகாஸ்
ஐநாவின் கூட்டத்தொடர் நடந்துவரும் நிலையில் அமர்வுகளில் தமிழர் உரிமை தொடர்பான அமர்வுகளில் கருத்துக்களை முன்வைப்பதற்கு ஜெனிவா வந்துள்ள ஈழத்தின் சட்டத்தரணி சுகாஸ் புனிதபூமிக்கு வழங்கிய செவ்வியில்
தமிழர் தாயகம் தற்பொழுது மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.குறிப்பாக பராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுகின்ற தீர்மானங்கள் தமிழர்களை மிகவும் புதைகுழியில் தள்ளும் நிலைக்கு கொண்டு செல்கின்றது.அண்மையில் இருபதாவது திருத்தச்சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்ப்பட்டு வாக்கெடுப்புக்கு வந்தபோது தமிழ் தேசிய கூட்டம் வகிக்கும் தமிழரசு கட்சி மட்டும் அதற்கு ஆதரவாக வாக்களித்து தமிழர்களுக்கு மிகப்பெரும் துரோகம் இழைத்துள்ளது.இதில் தமிழ் தேசிய ஏனைய பங்காளிக்கட்சிகள் ஆதரவு அளிக்கவில்லை.மேலும் விடயம் என்னவெனில் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்பதற்காக தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்(சி.சிறீதரன்-கிளிநொச்சி)சக பாராளுமன்ற உறுப்பினர்(வியாழேந்திரன-மட்டக்களப்பு) ஒருவரை கைநீட்டி தாக்கும் அளவுக்கு அரச விசுவாசத்தை காட்டப்பட்டுள்ளது.
மேலும் அரசியல் யாப்பு சபையில் அரசியில் யாப்பு நகல் சமர்க்கப்பட்டுள்ளது.அதில் சமஸ்டி என்ற சொல்லுக்கே இடமில்லை.ஒருமித்த நாட்டுக்குள் வடக்கு கிழக்கு இணைப்பற்ற தீர்வு என வரையப்பட்டுள்ளது.இதை திரு.சம்மந்தன் அவர்கள் கண்ணை முடிக்கொண்டு வரவேற்று அதை தமிழர்களுக்கு உரிய தீர்வாக கருதுகின்றார் என தொடர்ந்து குறிப்பிடுகின்றார்.
No comments
Post a Comment