Latest News

September 22, 2017

என்றுமே மறைந்து போகாத கறை (State Terrorism by Sri Lankan govt) நாகர்கோவில் பள்ளிச்சிறார் மீது சிங்களம் பயங்கரவாதம் புரிந்த அராஜக வெறியாட்டம்.
by admin - 0

என்றுமே மறைந்து போகாத கறை (State Terrorism by Sri Lankan govt) நாகர்கோவில் பள்ளிச்சிறார் மீது சிங்களம் பயங்கரவாதம் புரிந்த அராஜக வெறியாட்டம்.


1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி யாழ்ப்பாணம், நாகர்கோயில்மத்திய பாடசாலையில் இலங்கை விமானப் படையினரின் குண்டுவீச்சில் 39 மாணவர்கள் உயிரிழந்த 22 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று நினைவுகூறப்படுகிறது.

1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி, அன்று பகல் 12:30 மணியளவில் மதியநேர இடைவேளைக்கு மணியடித்த போது பிள்ளைகள் வெளியில் வந்து விளையாடிக் கொண்டிருந்தனர். பகல் 12.50 மணிக்கு இலங்கை விமானப் படைகளின் 'புக்காரா' விமானங்கள் குண்டுகளை கண்மூடித்தனமாக வீசின.

எதுவும் அறியாத மாணவர்கள் மரமொன்றின் கீழே பதுங்கிக் கொண்டனர். இந்தத் தாக்குதல்களால் மரத்தின் கீழே நின்ற 25 சிறார்கள் உடல்சிதறி அநியாயமாக கொல்லப்பட்டனர்.


இந்தத் தாக்குதலின்போது மொத்தம் 39 பேர் ஒட்டுமொத்தமாக ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். 200 பேர் வரையில் படுகாயமடைந்தனர். இதில் கொல்லப்பட்டவர்களில் 6 வயது குழந்தை முதல் 16 வயது சிறுவன் வரை அடங்குகின்றனர்.

விழி நீரில் வலி சுமந்து எமது கண்ணீர் அஞ்சலிகள்!

-ஈழம் ரஞ்சன்-
« PREV
NEXT »

No comments