லண்டன் கிரெடிட் ஸ்கோர் நிறுவனத்திற்கே ஆப்பு வைத்த ஹக்கர்: 44 மில்லியன் திருட்டு.
பிரித்தானியாவில் வேர் ஊன்றி, நமது வாழ் நாளில் எல்லா விடையங்களிலும் மூக்கை நுளைக்கும் நிறுவனம் எது என்று கேட்டால் அது ஈக்குவா -பாக்ஸ் என்னும் நிறுவனம் தான். வங்கியில் கடன் எடுக்கச் சென்றால் என்ன , இல்லையென்றால் கிரெடிட் கார்ட் விண்ணப்பித்தால் என்ன இந்த நிறுவனம் தான் கொடுக்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்கிறது. பிரித்தானியாவில் உள்ள அனைவரது பெயர், அவர்களது விலாசம், எங்கே கடன் பெற்றார்கள் எப்படி திருப்பி கட்டுகிறார்கள் என்பது போன்ற பல விடையங்களை ஈக்குபா பாக்ஸ் நிறுவனம் சேமித்துவைத்து. அதனை வங்கிகளுக்கு கொடுக்கிறது.
ஆனால் நேற்று முன் தினம் இன் நிறுவனத்தின் வலைத் தளத்தினுள் ஊடுருவிய ஹக்கர்கள், சுமார் 44 மில்லியன் மக்களின் விபரங்களை களவாடிச் சென்றுள்ளார்கள். இதனை இன் நிறுவனம் தற்போது பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது. இதில் தமிழகர்களாகிய உங்கள் விபரங்களும் திருடப்பட்டு இருக்கலாம். இது நிச்சயம் நடந்திருக்கும். எனவே உங்கள் பெயரில் வேறு யாராவது மோபைல் போன் பெறுவது. இல்லையென்றால் கிரெடிட் கார்டை விண்ணப்பிக்கவும் முடியும். ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.
https://www.theguardian.com/technology/2017/sep/08/equifax-told-to-inform-britons-whether-they-are-at-risk-after-data-breach
No comments
Post a Comment