பூமியில் மனித இனம் சந்திக்கும் கடைசி மாதம் ஆகஸ்ட் எனவும், அடுத்து வரும் செப்டம்பர் மாதத்தில் உலகம் அழிந்துவிடும் எனவும் பிரபல எண் கணித நிபுணர் வெளியிட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த டேவிட் மேடே என்பவர் எண்களையும், பூமியில் ஏற்படும் நிகழ்வுகளையும் பைபிளுடன் ஒப்பிட்டு எதிர்காலத்தை துள்ளியமாக கணிப்பதில் சிறந்தவர் ஆவார்.
சமீபத்தில் டேவிட் மேற்கொண்ட ஆய்வில் ஆகஸ்ட் மாதம் தான் மனிதர்களின் கடைசி மாதம் எனவும், செப்டம்பர் மாதம் உலகம் அழிந்து விடும் எனவும் கணித்துள்ளார்.
இது குறித்து டேவிட் வெளியிட்ட தகவலில் ‘எதிர்வரும் ஆகஸ்ட் 21-ம் திகதி சூரிய கிரகணம் நிகழ்கிறது.
இந்த சூரிய கிரகணத்திற்கும் உலக அழிவிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
அதாவது, விண்வெளியில் சுற்றி வரும் நிபுரு(Nibiru) எனப்படும் விண்கல் இந்த ஆகஸ்ட் மாதத்தில் எந்த நாளிலும் பூமியில் மோதும் என்பதற்கான அறிகுறி தான் இந்த சூரிய கிரகணம்.
பைபிளில் குறிப்பிட்டது போல இந்த சூரிய கிரகணம் தோன்றும் போது பூமியின் பெரும் பகுதி இருண்டதாக காணப்படும்.
விண்வெளில் தோன்றும் சந்திரனும் ‘கருப்பு சந்திரன்’ என அழைக்கப்படும்.
இதற்கு சில உதாரணங்களையும் குறிப்பிட முடியும். சூரிய கிரகணமானது ஒவ்வொரு 33 மாதங்களுக்கு ஒரு முறை ஏற்படுகிறது.
கிறித்துவ கடவுளின் பெயரான ஏலோகிம்(Elohim) என்ற வார்த்தை பைபிளில் 33 இடங்களில் குறிப்பிடப்படுகிறது.
சூரிய கிரகணமானது ஓரிகோன் மாகாணத்தில் உள்ள லிங்கன் கடற்கரையில் தோன்றுகிறது. இந்த ஓரிகோன் மாகாணம் அமெரிக்காவின் 33-வது மாகாணம் ஆகும்.
இந்த மாகாணமானது தெற்கு கரோலினா மாகாணத்தில் உள்ள சார்லிடன் நகர் எல்லைக்கு 33 டிகிரி தூரத்தில் அமைந்துள்ளது.
அதே சமயம், கடைசியாக இது போன்ற ஒரு சூரிய கிரகணம் கடந்த 1918-ம் ஆண்டில் நிகழ்ந்தது. அதாவது 99 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்துள்ளது.
மேலே குறிப்பிட்ட 33 என்ற எண்களை மூன்று முறை கூட்டினால் வரும் எண்கள் தான் 99.
எனவே, இவை அனைத்தையும் ஒப்பிட்டு பார்க்கையில் ஆகஸ்ட் மாதம் தான் பூமியில் மனிதர்கள் வாழும் கடைசி மாதம் என்பதில் சந்தேகமில்லை’ என டேவிட் விளக்கம் அளித்துள்ளார்.
எனினும், டேவிட்டின் இந்த கணிப்பு தவறானது எனவும், இது போன்று கணிப்புகள் ஏற்கனவே நடத்தப்பட்டு அனைத்தும் பொய்த்து போனதாக சில விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
No comments
Post a Comment