புத்தூர் கலைமதி மக்கள் 46 வது நாளாக தொடரும் இந்த போராட்டத்திற்கு நல்ல முடிவை பெற்றுக்கொடுக்க சம்பந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டும்.
மக்கள் குடியிருப்புக்கள் நிறைந்த பகுதியில் உள்ள மயானத்தை
அகற்றுமாறு கோரிக்கையை முன்வைத்து மக்கள் போராடி வருகிறார்கள்.
அந்த மக்களின்
கோரிக்கையை ஆராய்ந்து ஒரு நல்ல முடிவினை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் .
வட மாகாணசபை இதில் உடனடியாக தலையிட்டு பிரச்சனைக்கு நல்ல முடிவு எடுக்க வேண்டும்.
மக்கள் குடியிருப்புக்களுக்கு மிக அருகாமையில் மயானம் உள்ளதால் தான் அதை அகற்றுமாறு மக்கள் கோரிக்கை விடுகிறார்கள் .
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பல மக்கள் குடிசைவீடுகளில் சிறு பிள்ளைகளுடன் எவ்வாறு வாழமுடியும் .மாற்றுமயானம் ஒன்று இதற்கு அருகில் இருந்தும் சில சக்திகளின் தலையீடு காரணமாகவே அகற்ற மறுக்கிறார்கள் என மக்கள் தெரிவிக்கிறார்கள்.
46 தட்கன் கடந்து இடம்பெற்றுவருகின்ற மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள மயானங்களை அகற்றக்கோரிய தொடர் கவனயீர்ப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு தென்பகுதியில் இருந்து வருகைதரும் சமூக செயற்பாட்டாளர்களும், அரசியல்வாதிகளும் தமது முழுமையான ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.
No comments
Post a Comment