மாணவி வளர்மதி, தோழர்கள் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் மீதான குண்டர் சட்டத்தினை ரத்து செய்ய வலியுறுத்தியும், கதிராமங்கலத்தில் போராடிய பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 தோழர்களையும் விடுதலை செய்ய வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் மே பதினேழு இயக்கம் சார்பில் 30-7-2017 ஞாயிறு அன்று வள்ளுவர் கோட்டத்தில் நடத்தப்பட்டது.
குண்டர் சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம், UAPA போன்ற ஜனநாயக விரோத தடுப்புக் காவல் சட்டத்தினை நீக்கவும் வலியுறுத்தினர். போராடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என சர்வாதிகாரியைப் போல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் பேசியதையும் கண்டித்தனர். பாஜக-வின் அடியாளைப் போல் தமிழ் நாடு அரசு செயல்படுவதையும், போராடுபவர்கள் மீது அடக்குமுறைகளை ஏவி ஜனநாயக குரல்களை நசுக்குவதை கண்டித்தும் முழக்கமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் தோழர் குணங்குடி ஹனீபா, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் கரு.அண்ணாமலை, தமிழர் விடுதலை கழகத்தின் தோழர் சுந்தரமூர்த்தி, தமிழா தமிழா இயக்கத்தின் தோழர் இளங்கோ, மே பதினேழு இயக்கத் தோழர்கள் பிரவீன் குமார், கொண்டல் சாமி ஆகியோர் கண்டன உரையாற்றினார். தமிழ்த் தேச மக்கள் கட்சியின் தோழர் பா.புகழேந்தி, மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பின் தோழர் அருண், மக்கள் பாதை அமைப்பின் தோழர் உமர்முக்தார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
No comments
Post a Comment