முல்லைத்தீவில் சட்டவிரோத முஸ்லீம் குடியேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ‘சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான இளைஞர் அணி’ என்ற அமைப்பினால் இன்று காலை 11 மணியளவில் மாபெரும் போராட்டமொன்று இடம்பெற்றது.
முல்லைத்தீவு முள்ளியவளை காட்டாவிநாயகர் ஆலய முன்றலில் குறித்த பேரணி ஆரம்பித்து காடழிப்பு நிகழ்த்த படவிருக்கும் கூளாமுறிப்பு பிரதேசம் வரை சென்று நிறைவடைந்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அடர்ந்த வனப் பிரதேசமான ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பில் 177 ஏக்கர் வனப்பிரதேசம் அழிக்கப்பட்டு முஸ்லிம் மக்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் அமைச்சர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி போன்ற இடங்களிலிருந்து சமூகவளைதலங்களினூடாக ஒன்றிணைந்த இளைஞர் குழு குறித்த பேரணியை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது
மேற்படி ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பில் 177 ஏக்கர் வனப்பிரதேசம் அழிக்கப்பட்டு முஸ்லிம் மக்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் அமைச்சர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதன்போது மக்கள் தெரிவித்தனர்.
No comments
Post a Comment