மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி கடந்த 21ஆம் தேதி சென்னை மெரீனாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி மெழுகுவர்த்தி அஞ்சலிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அனுமதி மறுத்தும் தடையை மீறி கூடியதாக போலீசார் அவரையும் மேலும் சிலரையும் கைது புழல் சிறையில் அடைத்தனர்.
மேலும், அவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று ஒரு வழக்கு அவர் மீது போடப்பட்டது. இன்றும் ஒரு வழக்கு போடப்பட்டுள்ளது.
இன்று போடப்பட்ட வழக்கு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து மத்திய அரசுக்கு எதிராக வள்ளுவர்கோட்டம் அருகே நடத்திய ஆர்ப்பாட்டத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாக கூறி வழக்கு போடப்பட்டுள்ளது.
இந்த வழக்குக்காக இன்று சென்னை எழும்பூர் 14வது நடுவர் நீதிமன்றத்தில் திருமுருகன் காந்தி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மாஜிஸ்திரேட் ரோஸ்லின் துரை, நீங்கள் இந்த வழக்கில் பெயில் எடுக்க விரும்புகிறீர்களா என்று கேட்டதற்கு, சரி என்றார் திருமுருகன். பின்னர் வழக்கு பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகலில் வழக்கு விசாரணையின்போது, நீங்கள் ஏன் அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை என்று மாஜிஸ்திரேட் கேட்டதற்கு, வாய்வழியாக அனுமதி கேட்டோம். அதற்கு சரி என்று போலீசார் தெரிவித்தனர் என்றார்.
மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட், திருமுருகனை இந்த வழக்கில் சொந்த ஜாமீனில் செல்ல அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
No comments
Post a Comment