Latest News

June 03, 2017

அந்தாட்டிக்காவில் இரகசிய உலகம்- தாக்குதல் நடத்த அமெரிக்கா தயார்
by admin - 0

உலகம் முழுவதும் ஆய்வாளர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் மிகப்பெரிய சவாலாக இருப்பது அந்தாட்டிக்கா குறித்த மர்மங்களே.

 

ஒரு தரப்பினர் முற்றாக பனியின் மத்தியில், அல்லது கீழ் இரகசிய உலகம் இருக்க வேண்டும் என நிச்சயமாக நம்பி வருகின்றனர்.

என்றாலும் அசாதாரணமான நம்பிக்கைகளை வெளிப்படுத்தும் முன்னர் இதனை நரூபிப்பதற்காக பல ஆதாரங்கள் முன்வைக்கப்பட வேண்டும் என்பது அறிஞர்களின் கூற்று.


அந்த வகையில் அந்தாட்டிக்காவில் ஓர் இரகசிய உலகம் இருப்பது தொடர்பில் அன்றாடம் பல செய்திகளும் புகைப்படங்களும் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.

ஜெர்மனியில் 20ஆம் நூற்றாண்டில் நாசிசம் என்ற கொள்கை அதி உச்ச வளர்ச்சியில் இருந்தது. நாசியர்கள் மட்டுமே உலகை ஆழத்தகுந்தவர்கள் என்ற கொள்கை அவர்களுக்கு இருந்தது.

 

நாசிக்கள் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கியவர்கள். அவர்களுடைய காலத்தில் செய்யப்பட்ட பல இரகசிய திட்டங்களில் ஒன்றே பேஸ் 211 எனப்படும் திட்டம். அது அந்தாட்டிக்காவில் நடைமுறைப்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. 

அந்தாட்டிக்காவின் நிவ் ஸ்வாபியா (new swabia) அமைக்கப்பட்ட இந்த இடத்தை, துருவப் பகுதி தொடர்பிலான நீண்ட ஆய்வுப் பயணத்தினை மேற்கொண்ட புவியியலாளர்கள் கண்டு பிடித்தனர்.

அந்தப் பகுதியில் வெந்நீர் ஊற்றுக்களும், தாவரங்களும் நிறைந்த அதி உயர் தொழில்நுட்பத்தோடு கூடிய மர்மத் தளம் ஒன்று அடையாளம் காணப்பட்டு அதற்கு ஸ்டேஷன் 211 எனப் பெயரிடப்பட்டது. 

என்றாலும் அதன் பின்னர் இது குறித்து செய்திகள் எதுவும் அதிகமாக வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பலர் இவற்றினை ஓர் வதந்தியாகவே சித்தரித்தனர்.

 

இதேவேளை இவ்வாறான ஓர் தளம் தொடர்பில் ஏற்கனவே இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் 1946 - 1947களில் அட்மிரல் ப்ரைட் (Admiral Byrd) எனும் துருவ கண்டுபிடிப்பாளர் பேஸ் 211 இருப்பதை உறுதி செய்தார். 

அதன் பின்னர் அமெரிக்கா Operation Highjump எனப்படும் ஓர் திட்டத்தை கொண்டு வந்தது. இது அந்தாட்டிக்காவில் உள்ள இரகசியத் தளமான பேஸ் 211இனை கண்டுபிடித்து அழிப்பது தொடர்பாகவே இந்தத் திட்டம் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. அந்தத் திட்டத்தில் 13 கப்பல்களும், 1 விமானம் தாங்கி கப்பலும், விமானங்களும், 2 நீர் மூழ்கிக் கப்பல்களும், 4700 படை வீரர்களும் உள்ளடக்கப்பட்டிருந்தனர். இந்தப் படை அந்தாட்டிக்காவை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டது. 

 


அதனைத் தொடர்ந்து பேஸ் 211 குறித்து செய்திகளை அமெரிக்கா வெளியிட மறுத்துவிட்டது.Operation Highjump என்பது ஓர் பயிற்சி நடவடிக்கை எனவும் கூறி இரகசியங்கள் மூடப்பட்டன.


இன்று வரை அவை பற்றிய தகவல்கள் வெளிவரவில்லை. தற்போதும் அந்தாட்டிக்காவின் Neuschwabenland மலைத்தொடருக்கு கீழ் ஓர் இரகசியத் தளம், அதி உயர் தொழில்நுட்பம் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டு கொண்டே வருகின்றனர். 

அதேபோல் இந்தத் தளம் குறித்து அமெரிக்கா அறிந்துள்ள போதும், தகவல் வெளியிட மறுத்து வருகின்றது. மேலும் அந்தாட்டிக்காவின் பல பகுதிகள் இன்று வரை ஆய்வுகளுக்கு உட்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை எனவும் கூறப்படுகின்றது. 

எவ்வாறாயினும் பனியினால் சூழ்ந்த பகுதிக்குள் அதி உயர் தொழில் நுட்ப அறிவு கூடிய ஓர் இனம் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள் மனித குலத்திற்கு எதிரானவர்களாகவும் கூறப்படுகின்றனர். 

அதே சமயம் தற்போது இது குறித்து பல்வேறு ஆவணப்படங்களும், ஆய்வுச் செய்திகளையும் ஆங்கில ஊடகங்கள் அன்றாடம் வெளியிட்டு வருகின்றன.

இந்த தளத்திற்கும் வேற்றுக்கிரகவாசிகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும் ஒரு சில ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர் என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.


« PREV
NEXT »

No comments