அல்வாய் நாவலடியில் இளைஞர் குத்திக்கொலை
வடமராட்சி அல்வாய் நாவலடி இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார் .
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8-00 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
அல்வாய் நாவலடி பகுதியில் இருவருக்கு ஏற்பட்ட கையடக்கதொலைபேசி தகராற்றில் ஏற்பட்ட வக்குவாதத்தில் தனது நண்பர்ஒருவருடன் கூடச் சென்ற சமயம் குறித்த கொலைச் சந்தேக நபர் குறித்த இளைஞர் மீது கத்தியால் தலையின் பின்பகுதியில் குத்திக்கொலை செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அல்வாய் வடக்கு நாவலடி பகுதியை சேர்ந்த குணராஜா நிதசர்சன் (வயது26) என்ற இளைஞரே உயிரிழந்தவர் ஆவார்.
இச்சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரனைக்காக வைக்கப்பட்டுள்ளது ,இச்சம்பவம் அல்வாய் பகுதியில் பெரும் அச்சநிலையை ஏற்படுத்தியுள்ளது.
No comments
Post a Comment