Latest News

June 15, 2017

மக்கள் புரட்சியை அடுத்து கதிகலங்கிய தமிழரசு கட்சி முடிவை மாற்றியது ?
by admin - 0

தமிழ் மக்களின் ஒன்றுபட்ட எதிர்ப்பினால் அதிர்ச்சி அடைந்த சுமந்திரன் மற்றும் வடமாகண சபை தமிழரசு கட்சியினர் தங்களது முடிவை மாற்றிக்கொண்டனர் அதாவது வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீளப்பெற்றுக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 


முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சு வார்த்தையினை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆனால் முதல்வர் தெரிவிக்கையில் 

 ஊழல் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்ட இரண்டு அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருப்பது நியாயமானது. ஆனால் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத ஏனைய இரு அமைச்சர்களுக்கு எதிராக எவ்வாறு நீங்கள் நடவடிக்கை எடுப்பீர்கள் என இரா.சம்பந்தன் என்னிடம் வினவினார்.

ஏனைய இரு அமைச்சர்களுக்கு எதிராக சாட்சியங்களை முன்வைக்க சாட்சியாளர் விரும்புவதாகவும் அதேபோல் அவர்களுக்கு எதிராக மேலும் பல புதிய எழுத்து மூலமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக நான் சம்பந்தனிடம் கூறினேன்.

எனவே அந்த இருவரும் தொடர்ந்தும் அமைச்சு பதிவிகளில் இருக்கலாம் எனவும் ஆனால் அவர்கள் அமைச்சின் அலுவலகங்களுக்கு செல்ல கூடாது எனவும் சம்பந்தனிடம் எடுத்து கூறியிருக்கிறேன்.

ஆனால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தவறு என்று எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்திருந்தார். இருப்பினும் அதில் தவறில்லை. அது சரியானது தான் என்று நான் அவருக்கு தெரிவித்திருக்கிறேன் என்று குறிப்பிட்டார்.

இதேவேளை, தமிழரசுக் கட்சியின் தலைமையுடன் அதாவது இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோருடன் எனக்கு எந்தவித முரண்பாடுகளும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

   
« PREV
NEXT »

No comments