Latest News

June 10, 2017

ஈழத்து மரபணுவியலின் முன்னோடி டொக்டர் சிவ தியாகராஜா அவர்களின் புனித யாத்திரை என்னும் வரலாற்று நாவல் நூல் வெளியீடு
by Editor - 0

நூல் வெளியீட்டுவிழா 

                   புனித யாத்திரை

ஈழத்து மரபணுவியலின் முன்னோடி டொக்டர்  சிவ தியாகராஜா அவர்களின் புனித யாத்திரை என்னும் வரலாற்று நாவல் நூல் வெளியீடு 
Inline images 3

 சென்ற நூற்றாண்டில் இறுதியில் இடம்பெற்ற மிக மோசமான இடப்பெயர்வான 1995 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி இடம்பெற்ற யாழ்ப்பாண இடம்பெயர்வின் அவலங்களைச் சித்தரித்துக்காட்டும் ஒரு அற்புதமான நாவல். 
இந்த அவல நிகழ்வுகளிடையே பயணித்த ஒரு ஈழத்தமிழ் இளைஞனின் வாழ்க்கைப்பயணத்தை சித்தரித்துக்காட்டும் அற்புதமான வரலாற்று நாவல் இது 


ஈழத்தமிழர்களின் மிக முக்கிய ஆளுமையான கலாநிதி சிவ தியாகராஜா அவர்கள் மருத்துவம், உளவியல், வரலாறு, மரபணுவியல், இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருந்தவர் மட்டுமல்ல நாவல் சிறுகதை உலகிலும் தனி முத்திரை பதித்தவர். அந்தவகையில் சுமேரியரின் முதல் நாவலான கில்கமேஸ் காவியத்தை தமிழில் மொழிபெயர்த்ததிலிருந்து 10 இற்கும் மேற்பட்ட சிறந்த நாவல்களை எழுதியுள்ளார். 

கடந்த மூன்று வருடங்களாக புதினம் இதழில் எழுதிவந்த வாலாற்றுத் தொடரான புனித யாத்திரை தற்போது அச்சேறி நூலுருப் பெற்றிருக்கிறது, தற்போது இவர் புதினம் இதழில் பூதத்தம்பி கோட்டை என்கின்ற வரலாற்றுத் தொடரினை எழுதி வருவதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த நூல் வெளியீட்டு விழாவானது நாளை மாலை 
கிங்ஸ்ரன் தமிழர் தகவல் நடுவத்தின் ஆதரவில்
நியூ மோல்டன் மனோ பார்க் மிஸ்ரா சனசமூக மண்டபத்தில்

யூன் மாதம் 10.06.2017 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு
கீழ்க்காணும் முகவரியில் நடைபெறவிருக்கும் வெளியீட்டு விழாவில் கலந்து ஆதரவளித்துச் சிறப்பிக்குமாறு தங்களை அன்போடு அழைக்கிறோம்.

YOU ARE CORDIALLY INVITED TO THIS BOOK LAUNCH

On Saturday 10th June 2017 at 5.00 p.m.

At Shiraz Mirza Manor Park Community Hall 316B, 

Malden Road, New Malden, KT3 6AU.

Car Park Available. Buses 213, 613, K1 & K5 goes there.

Nearest Rail Station: Motspur Park.
« PREV
NEXT »

No comments