Latest News

May 16, 2017

லண்டனில் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவுகள் !! (சைக்கிள் பயணம், இரத்ததான நிகழ்வு )
by admin - 0

லண்டனில் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவுகள் !!
(சைக்கிள் பயணம், இரத்ததான நிகழ்வு)
 
மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினை மையப்படுத்திய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் புலம்பெயர் தேசங்களெங்கும் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனொரு அங்கமாக, பிரித்தானியாவில் இரத்ததான நிகழ்வொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் ஏற்பாடு செய்துள்ளதோடு, ஸ்கொட்லாந்தில் இருந்து லண்டன் வரையிலான விழிப்புரை போராட்டம் ஒன்றும் உந்துருளியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
 
இரத்ததான நிகழ்வு, மே16ம் நாள் செவ்வாய்க்கிழமை, மாலை 4 மணி முதல்  8 மணி வரை Edgware Blood Donor Center, community Hospital, Burnt Oak Brodway, Edgware, HA8 0AD  எனும் முகவரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த மே12ம் நாளன்று தொடங்கிய விழிப்புரை போராட்டம், உணர்வெழுச்சியுடன் 
 
லண்டனில் உள்ள பிரித்தானிய பிரதமர் வாயில்தளம் நோக்கி உற்சாகத்துடன் வந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாதம் ஊடக சேவை 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
    
« PREV
NEXT »

No comments