பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மாற்றீடாக கொண்டுவர தயாராகும் சட்டத்தின் திருத்தங்கள் மிகவும் மோசமானதாகவும் மக்களின் அடிப்படை சுதந்திரத்தை கூட பறிக்கும் வகை யில் அமைந்துள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பின ருமான எம்.ஏ. சுமந்திரன் குற்றம் சுமத் தினார். தற்போது அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்கள் அரசாங்கத்தால் உடனடியாக மீள் பரிசீலனை செய்யப்படவேண்டியதுடன் அவசரமாக சீர்திருத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் மாற்றங்களை கொண்டுவரும் வகை யில் அமைச்சரவையில் முன்வைக்கப் பட்டுள்ள திருத்தங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப் பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது; கடந்த காலங்களில் நடைமுறையில் இருந்த பயங்கரவாத தடைச்சட்டம் திருத்தப்பட்டு புதிய சட்டமூலம் கொண்டுவர அமைச்சரவையில் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது முன்வைத்துள்ள திருத்தமானது கடந்த காலத்தில் இருந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை விடவும் மோசமானதாக முன்வைக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டம் திருத்தபட வேண்டும் என கடந்த ஆண்டு இறுதியில் யோசனைகள் முன்வைக்கப்பட்ட நிலையில் என்னால் மூன்று யோசனைகள் முன்வைக்கப்பட்டன. குற்ற ஒப்புதல் வாக்குமூலம் கவனத்தில் கொள்ளப்படல், தடுப்புக் காவலில் வைக்கப்படும் கால எல்லை 2 மாதங்களாக குறைக்கப்படல், உடனடியாக சட்டத்தரணி ஒருவரை ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட மூன்று யோசனைகளை முன்வைத்துடன் நான்காவதாக பயங்கரவாதம் என்பதற்கான வரைவிலக்கணம் ஒன்றையும் முன்வைத்திருந்தோம். எம்மிடம் அதற்கான வரைவிலக்கணம் ஒன்று வினவப்பட்ட நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளடக்கப்பட்டுள்ள பயங்கரவாதம் என்பதற்கான வரைவிலக்கணத்தை கொண்ட வகையில் நாம் யோசனை முன்வைத்திருந்தோம்.
எனினும் அமைச்சரவையில் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள திருத்தமானது ஆரம்பத்தில் எம்முடன் இணங்கியதாக அமையாது மிகவும் மோசமான ஒன்றாக அமைந்துள்ளது. இதில் தடுப்புக் காவல் கால வரையறை மாத்திரம் தெரிவித்ததைப்போல உள்ள நிலையில் ஏனைய இரண்டு பிரதான யோசனைகளும் மாற்றப்பட்டு மிகவும் மோசமான வகையில் கொண்டுவரப்பட்டுள்ளது. அதேபோல் பயங்கரவாதம் என்ற பதத்தின் வரைவிலக்கணம் மாற்றப்பட்டு இதில் உள்ளடக்கப்பட அவசியமற்ற அனைத்தையும் இணைத்த வகையில் பயங்கரவாதம் என்பதற்கான வரைவிலக்கணத்தை முன்வைத்துள்ளனர். சாதாரண நபர்கள் கூட பயங்கரவாத வரைவிலக்கணத்தில் வரக்கூடிய வகையில் திருத்துமாறு அமைந்துள்ளது. பாரளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவில் நாம் இந்த விடயங்களை முன்வைத்துள்ளோம்.
அதேபோல் அரசாங்கதின் இந்த செயற்பாடு மிகவும் மோசமான ஒன்றாக அமைந்துள்ளது. அதேபோல் இந்த விடயத்தில் அரசாங்கம் உடனடியாக மாற்றங்களை கொண்டுவர வேண்டும். தற்போது அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்களை மீள் பரிசீலனை செய்ய வேண்டும். அதேபோல் அவசரமாக சீர்திருத்தப்பட வேண்டும். மக்களின் அடிப்படை உரிமையை கூட பெற்றுக்கொள்ள வாய்ப்புகள் இல்லாத வகையில் திருத்தங்கள் அமையக்கூடாது. என்பதை வலியுறுத்துவதாக அவர் தெரிவித்தார்.
No comments
Post a Comment