அரும்புகள் சமூக அபிவிருத்தி நிறுவனம் வடக்கு கிழக்கில் எமது மக்களுக்கான கல்வி மற்றும் வாழ்வாதார உதவிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.
உலகில் பரந்து வாழ்கின்ற அனைத்து தமிழர்களின் சேவைகளுக்காக சாதி... மதங்களுக்கு அப்பாற்பட்டு அரசியல் சார்பற்று அனைவரும் ஒன்றே என்ற எண்ணத்திற்கமைய "அன்பினால் அனைவரையும் அரவணைப்போம்" என்ற தாரக மந்திரத்துடன் ஈழத்திலே யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டு கல்வி, வாழ்வாதாரம் இழந்து நற்கின்ற நம் உறவுகளுக்கு பல் வேறு உதவிகளை "அரும்புகள்" செய்து வருகின்றமை அனைவரும் அறிந்ததே...
அந்த வகையில், ஈழத்திலே நடந்து முடிந்த கோர யுத்தத்தினால் நமது எதிர்கால மாணவர் சந்ததியினரின் கல்வி மிகவும் கேள்விக்குறியாகி உள்ளது. பல குழந்தைகள் இன்று வரை போதிய கல்வி வசதியினைப் பெற முடியாமல் எதிர்கால வாழ்வினை தொலைத்து நிற்கிறார்கள்.! நாளை நமது தமிழ்க் குழந்தைகள், இவ்வுலகில் சிறந்த கல்விமான்களாக வலம் வந்து பல துறைகளில் சாதனை புரிய வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு கல்விக்காக ஏங்கும் மாணவர்களை அரவணைத்து உச்சிமுகர்ந்து சேவை செய்து வருகின்றது அரும்புகள் சமூக அபிவிருத்தி நிறுவனம்.
வடக்கு கிழக்கில், ஆரம்பக் கல்வி முதல் உயர்தரக் கல்வி பயின்று வரும் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகள் நடத்துதல் , கற்றல் உபகரணங்கள் வழங்குதல் , விசேட வகுப்புகள் மற்றும் முன்னோடிப் பரீட்சைகளை நடாத்தி மாணவர்களை பரீட்சைக்காக தயார் படுத்துதல், கல்வி கருத்தரங்குகள் நடத்தி மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு உதவுதல், மற்றும் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்க்கு சுய தொழில்களை உருவாக்கி உதவுதல் போன்ற சேவைகளை தொடர்ந்து மேற்கொள்கின்றது.
புலம்பெயர் உறவுகள் மற்றும் தாய்த்தமிழக உறவுகள் தருகின்ற பேராதரவினைப் பொறுத்து எமது சேவை இன்னும் விரிவாக்கம் செய்யப்படும் என்பதை மிகவும் மகிழ்ச்சியோடு அறியத் தருகின்றோம்.
அத்தோடு கடந்த மாதங்களில் பிரான்சில் இருக்கும் மகளீர் அமைப்பும் பிரித்தானியாவில் வசிக்கும் உறவான வரதன் என்பவராலும் அரும்புகள் ஊடாக இரு பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன . அவர்களுக்கு பயனாளிகள் சார்பாகவும் அரும்புகள் சார்பாகவும் எமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
No comments
Post a Comment