தேசத் துரோக வழக்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை 15 நாள் காவலில் வைக்க சென்னை பெரு நகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் வைகோ பேசியதாக பொலிஸார் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை பெரு நகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதிகள் வைகோவை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டனர்.
மேலும், வைகோவுக்கு ஜாமீன் தர நீதிமன்றம் ஒப்புதல் அளித்த நிலையிலும், ஜாமீனில் செல்ல விருப்பம் இல்லை என்று வைகோ தெரிவித்துள்ளார்.
இதையடுத்து வைகோவை 15 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து வைகோ புழல் சிறையில் அடைக்கப்பட உள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டள்ளன.
No comments
Post a Comment