தமிழ்நாட்டிலுள்ள பேரூராதீனத்தால் சமய, இலக்கிய தமிழ்ப்பணிகளை ஆற்றி வரும் ஈழத்தமிழரான சிவபாதம் கணேஷ்குமார் அவர்களை பாராட்டி (11-03-2017) இந்து இளம்பருதி என்னும் விருது வழங்கி கௌரவிக்கப்படடார் . தமிழ்நாட்டிலுள்ள திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழி பேரூராதீனம் "அருள்திரு சாந்தலிங்க அடிகளார்" குருபூசை விழாவில் இந்து இளம்பரிதி என்னும் விருதினை சீர்வளர்சீர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் வழங்க அவர்களுடன், முனைவர் தவத்திரு மருதாசல அடிகளார், பழனி ஆதினம், கெளமார ஆதினமும் இணைந்து வாழ்த்தினார்கள்.
அன்றைய குரு பூசை விழாவில் குருவருளும் திருவருளும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது சிவபாதம் கணேஷ்குமார் அவர்கள் யாழ் குப்பிழான் கிராமத்தில் பிறந்து சிறுவயதில் இருந்து தமிழ் சமய பணிகளை ஆற்றி வந்த இவர், யுத்தத்தினால் இடம் பெயர்ந்து லண்டன் சென்று அந்நாட்டிலும் தமிழ் சமயப்பணிகளை ஆற்றி வருவதுடன் சர்வதேச இந்து இளைஞர் பேரவையை ஸ்தாபித்து பல சமய சமூக தமிழ் பணிகளை ஆற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
No comments
Post a Comment