யாழ். பல்கலைகழக கலைப்பீட மாணவர்கள் ஐந்தம்ச கோரிக்கைகளை முன் வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். குறித்த போராட்டம் பல்கலைக்கழக வளாகத்திற்குள் இன்று காலை ஒன்பது மணி தொடக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதேவேளை யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் ஒன்றிணைந்து நேற்று (29) காலை பல்கலைக்கழகத்தில் கறுப்புதுணியால் வாய்மூடி அமைதியான போராட்டத்தினை முன்னெடுத்ததுடன், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக தமது கண்டனத்தினையும் தெரிவித்திருந்தனர்.
கடந்த வாரம் புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வின் போது இடம்பெற்ற அசம்பாவிதத்தின் பின்னர் கலைப்பீட மாணவர்கள் 13 பேருக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டதுடன், கலைப்பீடமும் துணை வேந்தரினால் கலைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment