
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் குற்றவாளிகளை நெருங்கி விட்டோம் என்று பன்னீர்செல்வம் ஆதரவு அணியைச் சேர்ந்த பி.எச். பாண்டியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சட்டப் பேரவை முன்னாள் தலைவர் பி.எச்.பாண்டியன், ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பினார்.
மேலும், ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அப்பல்லோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட டிஸ்சார்ஜ் அறிக்கையில், அவரை யாரோ தள்ளிவிட்டதாகக் கூறப்பட்டிருப்பதாகவும், குற்றவாளிகளை நெருங்கி விட்டோம் என்றும் பி.எச். பாண்டியன் கூறினார்.
தேசத் தலைவரான ஜெயலலிதா என்எஸ்ஜி பாதுகாப்பு இல்லாமல் இருந்தது ஏன்? அவருக்கு என்எஸ்ஜி என்று அழைக்கப்படும் தேசிய பாதுகாப்புப் படையின் பாதுகாப்புத் தேவையில்லை என்று உத்தரவிட்டவர்கள் யார்? என்றும் கேள்வி எழுப்பினார்.
ஜெயலலிதாவுக்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் அளித்த சிகிச்சை குறித்த முழு விவரங்களையும் அரசு வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஜெயலலிதா குறித்து அப்பல்லோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட டிஸ்சார்ஜ் அறிக்கையில், அவரை யாரோ தள்ளிவிட்டதாகக் கூறப்பட்டிருப்பதாகவும், குற்றவாளிகளை நெருங்கி விட்டோம் என்றும் பி.எச். பாண்டியன் கூறியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
No comments
Post a Comment