
இன்றைக்கு இந்த அரசு உலகிற்கு கூறுவது என்னவென்றால் கொண்டுவரப்படும் புதிய அரசியல் அமைப்பு தமிழ் மக்களின் விருப்பத்துடன்தான் கொண்டு வருப்படுகின்றது.
இந்த செய்தியை அரசு அண்மையில் ஐ.நாவில் இடம்பெற்ற கூட்டத்தில் 64 நாடுகளை சந்தித்து கூறி வந்துள்ளது.
ஆனால் இது அரசியல் மோசடி என்பதை உலகிற்கு சொல்வதற்காகதான் இன்று ஒன்று கூடியுள்ளோம் என எழுக தமிழ் பேரணி ஏற்பாட்டாளர் குறிப்பிட்டுள்ளார்
வரப்போவது ஒற்றை ஆட்சி அரசியல் அமைப்பு என அனைவருக்கும் தெரியும் இது தமிழ் மக்களுக்கு சாவடி அமைக்கும் ஒரு அரசியல் அமைப்பு எனவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த மூன்று அரசியல் அமைப்பும் ஒற்றை ஆட்சியாக இருந்தமையினால்தான் நாம் அழிந்து கொண்டிருக்கின்றோம்.

எங்களுடைய விருப்பு ஒவ்வொரு நாளும் அழிக்கப்படுகின்றது. அழிவின் உச்சம்தான் தென் தமிழ் தேச மண் ஆகும் எனவும் கூறியுள்ளார்.
எமது “எழுக தமிழர் “எழுச்சியின் மிக முக்கிய நோக்கம் எங்கள் பெயரை வைத்து அரசியல் அமைப்பை நிறைவேற்ற வேண்டாம் எனவும் உணர்ச்சி பொங்க தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
No comments
Post a Comment