தாயகத்தின் பிரபல புரட்சி பாடகர் எஸ்.ஜி.சாந்தன் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன.
எனினும் அந்த செய்தியில் உண்மை இல்லையென அறிவிக்கப்பட்டிருந்தது. அவர் ஆபத்தான நிலையில் உயிரோடு இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது
வைத்தியசாலை தகவல்படி இன்று 2:10 அளவில் சாந்தனின் உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது
முன்னய செய்தி
ஈழத்தின் தலைசிறந்த பாடகரான எஸ்.ஜி.சாந்தன் சுகயீனம் காரணமாக இன்று காலை காலமானார். சிறுநீரகங்கள் இரண்டும் செயலிழந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த இவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சற்று முன்னர் காலமானார்.
'இந்த மண் எங்களின் சொந்த மண்' எனும் பாடலின் மூலம் தனது இசைப்பயணத்தை ஆரம்பித்த சாந்தன் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் புகழ்கூறும் "பிட்டுக்கு மண்சுமந்த பெருமானார் கொக்கட்டிச்சோலையிலே உருவானார்"
மற்றும் அம்பிளாந்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் புகழ் கூறும் தோரணம் இசைப்பேழையில் உள்ள மூன்று பாடல்கள் என பல பாடல்களை பாடி தமிழ் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment