Latest News

January 10, 2017

யாகூ நிறுவனத்தின் பெயர் மாற்றம்.. புதிய பெயர் என்ன தெரியுமா?
by admin - 0

பெங்களூர்: யாகூ நிறுவனம் தனது பெயரை அல்டாபா என மாற்றியுள்ளதோடு, தலைமைச் செயல் அதிகாரியையும் மாற்றியுள்ளது. ஜிமெயிலுடன் போட்டி போட்டு இமெயில் சேவைகளை வழங்கி வந்தது யாகூ. இதுதவிர டிஜிட்டல் விளம்பரம், மீடியா சொத்துக்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் வெரிசோன் நிறுவனத்திற்கு $4.83 பில்லியன் டாலருக்கு யாகூ தனது முக்கிய வர்த்தகமான, இமெயில், விளம்பரம் மற்றும் மீடியா சொத்துக்களை விற்பனை செய்தது.

அதேநேரம், இந்த விற்பனையை திருத்தவோ, ரத்து செய்யவோ உரிமையுள்ளது என்றும் நிபந்தனையுடன் இந்த டீல் நடந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு டேட்டா திருட்டு நடந்துவிட்டதாக யாகூ தெரிவித்தது. சுமார் 500 மில்லியன் வாடிக்கையாளர்கள் அக்கவுண்டுகள் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாகவும், இன்னொருமுறை ஒரு பில்லியன் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டதாகவும் யாகூ கூறியது. ஆனால் வெரிசான் அதிகாரிகளோ, யாகூ மீது நம்பிக்கையுள்ளதாக கூறியதுடன் இந்த பிரச்சினை குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் வெரிசானுடன் போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே யாகூ நிறுவனம் இனி அல்டாபா ஐஎன்சி என்று அழைக்கப்படும். இதுவரை அதன் தலைமை செயல் அதிகாரியாக பதவி வகித்த மரிஸ்சா மேயர் பதவி விலக உள்ளார். நிறுவனத்தின் 5 இயக்குநர்களும் பதவி விலக உள்ளனர். மற்ற இயக்குநர்கள் அல்டாபா நிறுவனத்தை மேற்பார்வை செய்வார்கள்


« PREV
NEXT »

No comments