
அமோக மக்கள் ஆதரவுடன் கிழக்கில் எழுக தமிழ் நிகழ்விக்காக பிரச்சார பணியில் இன்று தமிழ் உணர்வாளர்களுடன் ஆரயம்பதி மற்றும் முகத்துவாரம் பிரதேசங்களில் களப்பயணம்.
- ஈழத்து நிலவன் -

அடக்கப்படும் சமூகம் போராடும்! தொடர்ச்சியான தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் மக்கள் எழுச்சியாக வரலாறாகின்ற காலங்கள் இவை.

அந்த வகையில் தமிழீழத்தில் கிழக்கு மாகாணத்தில் மட்டு நகரில் சனவரி 21இல் ”எழுக தமிழ்” நிகழ்வு நடைபெறவுள்ளது.
இது காலத்தின் ஒரு முக்கிய தேவை ஆகும்.
சிங்கள பேரினவாதிகள் அரச ஆதரவோடு கிழக்கு மாகாண தமிழ் மக்கள் மீது கட்டவிழ்க்கும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் அனைத்து தமிழ் மக்களும் எமது ஆதரவை நல்குவோமாக.
தமிழர்களை பிரித்து ஆள பேரினவாதிகள் முனைகிறார்கள். தமிழ் மக்கள் ஒற்றுமை என்ற ஆயுதத்தை கையில் எடுத்து எழுச்சி கொள்ள வேண்டும்.

வீழ்ந்தோம் என்பது உண்மை தான். ஆனால் இனி எழ மாட்டோம் என்பதில் உண்மை இல்லை.
மறுக்கப்பட்ட நீதி அநீதியை விட கொடுமையானது!
கிழக்கே விளித்துக்கொள். தமிழர்களே நீங்கள் ஒன்றாய் கூடும் தருணம். ஏழுக தமிழின் வெற்றிக்கு எங்கள் உரிமை குரலை பலப்படுத்துவோம்
தமிழ் உணர்வாளர்களே வாருங்கள் உங்களையும் களப்போராளி ஆக்கி கொள்ளுங்கள் இது உங்கள் தேசம் அதில் உரிமையை கேட்பது உங்கள் கடமை ஒற்றை ஆட்சியை நிராகரிப்போம் உரிமையை உரத்துக்கேட்போம்.
கிழக்கே அலையாக எழுக தமிழினமே! எழுக தமிழே !
No comments
Post a Comment