Latest News

December 03, 2016

இராணுவப் புலனாய்வு பிரிவு கருணா குழுவால் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட ஊடகவியலாளர் சி.செல்வதீபன் மீண்டும் ஜெனிவாவில் சாட்சியம்
by admin - 0

இராணுவப் புலனாய்வு பிரிவு கருணா குழுவால் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட ஊடகவியலாளர் சி.செல்வதீபன் மீண்டும் ஜெனிவாவில் சாட்சியம்.




jaffna







இராணுவப் புலனாய்வுப் பிரிவு மற்றும் கருணா குழுவால் கடத்திச் சென்று சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட போதும் கருணா குழுவால் மோசமாக தாக்கப்பட்டமையினால் இடுப்பு பகுதி மோசமாக பாதிக்கப்பட்டு 10 வருடங்கள் ஆகின்றபோதும் ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபனுக்கு நீதி இன்னும் கிடைக்காமையினால், மீண்டும் ஜெனிவாவில் சாட்சியம் அளிக்கவுள்ளார்.



இராணுவப் புலனாய்வு கருணா குழுவால் ஆயுதமுனையில் கடத்தப்பட்டு கடுமையான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபனுக்கு நீதி கிடைக்காத நிலையில் சந்தேக நபர்கள் நல்லாட்சியிலும் சுகந்திரமாக உலாவுகிறார்கள்.

மகிந்த ஆட்சிக் காலத்தில் 2014 ஆம் ஆண்டு உயிர் அச்சுறுத்தல் காரணமாக ஐரோப்பா நாடு ஒன்றில் வாழ்ந்து வரும் நிலையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் தனக்கு நீதி கிடைக்கவேண்டும் என அவர் தொடர்ந்தும் போராடி வருகின்றார்.


சிவஞானம் செல்வதீபன்

2007ஆம் ஆண்டு சித்திரை மாதம் 6 ஆம் திகதி இரவு 8:30 மணியளவில் மெனரகல மாவட்டம் வெள்ளவாய பிரதேசத்தில் வர்த்தக நிலையத்தில் வைத்து வெள்ளைவானில் வந்த 5 பேர்கொண்ட இராணுவப் புலனாய்வு பிரிவு மற்றும் கருணா குழு ஆயுததாரிகளினால் வர்த்தக நிலைய உரிமையாளர் பொன்னையா செல்வராசா ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன் ஆகியோர் ஆயுதமுனையில் கடத்திச்செல்லப்பட்டனார்.



மறுநாள் அதிகாலை 4:30 மணியளவில் பொலனறுவ மாவட்டத்தின் வெலிக்கந்த காட்டுப் பகுதியில் அமைந்திருந்த கருணா குழுவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மூன்றுமாதம் கடுமையான சித்திரவதைக்குட்டுத்தப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு 3 மாதங்களின் பின்னர் ஆணிமாதம் 28 ஆம் திகதி இரவு பொலனறுவ புகையிரதநிலையத்தில் வைத்து கருணா குழுவால் விடுவிக்கப்பட்டனர்.

இருவரையும் விடுவிக்க 75 லட்சம் ரூபா கருணா குழுவால் கப்பமாக பெறப்பட்ட பின்னரே கடும் நிபத்தைனைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

அன்றைய காலப்பகுதியில் நாட்டில் கடுமையான யுத்தம் நடைபெற்றமையினால் வழக்குகளுக்கு பாதிக்கப்பட்ட தரப்பு சமூகமளிக்கவில்லை இந்த நிலையில் கருணா குழு, இனியபாரதி மற்றும் அடையாளம் தெரியாத இராணுவப்புலனாய்வுப் பிரிவு உறுப்பினர்களுக்கு எதிராக பல இடங்களில் முறைபாடு கொடுக்கப்பட்டது.



கடந்த 9 வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணைகள் தொடர்பாக தற்போதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதுவிதமான தகவல்களையும் உரியதரப்புகள் வழங்கவில்லை

இதுதொடர்பாக 2010 ஆம் ஆண்டு நெல்லியடி முருகன் கோவில் மண்டபத்தில் நடைபெற்ற காணமால் போனவர்கள் தொடர்பான சாட்சியங்களை வழங்கும்போது சாட்சியம் அளிக்கப்பட்டது.

2010 ஆம் ஆண்டு வடமராட்சி நெல்லியடியில் சாட்சியம்

கொழும்பில் இருந்துவந்து 2011 ஆம் ஆண்டு குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவின் விசாரணையின் போது நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் வைத்து சாட்சியம் கொடுக்கப்பட்டது.



வெல்வாய பொலிஸ் நிலையம், யாழ் மனித உரிமை ஆணைக்குழு சர்வதேச செஞ்சுழுவக்குழு மற்றும் கோப்பாய் பிரதேச செயலகத்தில் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி ஆணைக்கழு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு போன்ற அமைப்புக்களிடம் முறைபாடுகளும், சாட்சியங்களும் வழங்கப்பட்ட நிலையில் இதுவரை எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை அத்துடன் கருணா, இனியபாரதி ஆகியோர் எதிராக முறைபாடு கொடுக்கப்பட்டும் இது தொடர்பான வழக்குகளுக்கு இதுவரை கைது செய்யப்படவில்லை.



பல படுகொலைகள் கடத்தல்களுடன் தொடர்புடைய இருவரும் நல்லாட்சி அரசின் செல்லப்பிள்ளைகளாக இருந்து வருகின்றார்கள், வெலிகந்தப் பகுதியில் இவர்கள் தடுத்துவைக்கப்பட்ட பகுதியில் பல இளைஞர் யுவதிகள் படுகொலை செய்யப்பட்டதாக அப்பகுதியை விசாரணை செய்து உண்மைகளை அறியவேண்டும் என கடந்தவருடம் ஜெனிவா ஐக்கியநாடுகள் மனிதஉரிமை ஆணைக்குழுவில் ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன் சாட்சியம் வழங்கியிருந்தார்.



அத்துடன் அவர் மேலும் சாட்சியத்தில் அவரது சகோதரன் சிவஞானம் பார்த்தீபன் 2008 ஆம் ஆண்டு 8 ஆம் மாதம் 21 ஆம் திகதி இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணமால் ஆக்கப்பட்டநிலையில் இதுவரை அவர் தொடர்பாக எந்தவிதமான தகவல்களும் குடும்பத்தினருக்கு கிடைக்கவில்லை,


சிவஞானம் பார்த்தீபன்

இது தொடர்பாக வெல்லவாய புத்தள பொலிஸ் நிலையங்கள் யாழ் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழு கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்கழு போன்ற பல தரப்புகளிடம் முறைப்பாடு செய்தும் இதுவரை எதுவிதமான தகவல்களையும் உரியதரப்புக்கள் குடும்பத்தாருக்கு வழங்கவில்லை.



ஊடகவியலாளர் 2014 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 14 ஆம் திகதி வல்லை பதியில் வைத்து இரவு 8:30 மணியளவில் இராணுவப்புலனாய்வு பிரிவு உறுப்பினர்களினால் தாக்கப்பட்டு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார், இவ்வழக்கு விசாரணைகள் தற்போது பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

குறித்த சந்தேக நபர்கள் தற்போது வடமராட்சியில் இருந்தபோதும் ஒருவர்கூட இதுவரை கைது செய்யப்படவில்லை, இந்தச் சூழ்நிலையில் அச்சத்தின் மத்தியில் வாழ்ந்து வரும் செல்வதீபனின் குடும்பத்தினருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதுடன் கண்கணிக்கப்பட்டும் வருகின்றனர்.

ஜெனிவாவில் 2017 மார்ச் மாதம் நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் சாட்சியங்களை பதிவு செய்யவுள்ளார்; 

நல்லாட்சி என்று கூறப்பட்டபோதும் பாதிக்கப்பட்ட தரப்புகளுக்கு இதுவரை எந்தவிதமான நீதியும் கிடைக்கவில்லை.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள், கடத்தப்பட்டவர்கள் பயங்கரவாத சட்டத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பல வருடங்களாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் தொடர்பாக குற்றவாளிகள் பல பேர் சுகந்திரமாக நடமாடும் போதும் அரசு, எந்தவிதமான நடவடிக்கைளும் எடுக்கவில்லை.

பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு தொடர்ந்தும் புலனாய்வு பிரிவுகளினால் அச்சுறுத்தல் விடுவிக்கப்பட்டு வருவதோடு அவர்களின் குடும்பங்களும் கண்கணிக்கப்பட்டு வருகிறார்கள்.

மேற்குறிப்பிட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நீதி கிடைக்க உரியதரப்பினார் முயற்சிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments