சென்னை: முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 22ம் தேதி, சென்னை கிரீம் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில், நேற்றுவரை முதல்வர் ஜெயலலிதாவின் சிகிச்சை முறை மற்றும் ஆரோக்கியம் குறித்து 12 பத்திரிகை குறிப்புகளை அப்பல்லோ வெளியிட்டிருந்தது. 12வது அறிக்கையில், ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு என்ற தகவல் கூறப்பட்டிருந்தது.
அதற்கு முன்பு வெளியான பிரஸ் ரிலீஸ்களில், ஜெயலலிதா உடல் நிலை, மருத்துவ சிகிச்சைக்கு ஒத்துழைக்கிறது, உடல் நிலை முன்னேறி வருகிறது, செயற்கை சுவாசம் இல்லாமல் இயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது என்பது போன்ற ஆறுதல் வார்த்தைகள்தான் இருந்தன. நேற்றுதான் மாரடைப்பு என்ற பகீர் வார்த்தை இடம் பெற்றது. ஆனால் கூட அவர் சீரியஸ் என்ற வார்த்தையை அப்பல்லோ தெரிவிக்கவில்லை.
ஆனால், இன்று மதியம் 1 மணியளவில் வெளியான அப்பல்லோவின் 13வது பிரஸ் ரிலீசில், ஜெயலலிதா உடல்நிலை தொடர்ந்து, மோசமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளது. இதை அப்பல்லோ, ஜெயலலிதா கவலைக்கிடமாக உள்ளார் என்று கூறுவதாகவும் எடுத்துக்கொள்ள முடியும்.
எய்ம்ஸ் டாக்டர்கள் வருகைக்கு பிறகு ஜெயலலிதா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆனால் அப்பல்லோவின் 13வது அறிக்கை, அதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments
Post a Comment