Latest News

December 07, 2016

கூட்டமைப்பு மீதான தாக்குதல்; மூவருக்கு இரட்டை மரணதண்டனை
by admin - 0

கூட்டமைப்பு மீதான தாக்குதல்; மூவருக்கு இரட்டை மரணதண்டனை

 
யாழ்ப்பாணம் - நாரந்தனைப் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு, இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட 3 எதிரிகளுக்கு இரட்டை மரண தண்டனையும் 25 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும் விதித்து யாழ். மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

கடந்த 2001 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் திகதி ஊர்காவற்துறை நாரந்தனையில் தேர்தல் பரப்புரைக்குச் சென்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடத்தி இருவரைக் கொலை செய்து, 18 பேருக்குக் காயம் ஏற்படுத்தியதாக ஈபிடிபி கட்சியைச் சேர்ந்த 4 பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டது. 

இந்த வழக்கில் 3 எதிரிகளுக்கு இரட்டை மரண தண்டனையும் 25 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும் விதித்து, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார். 

கடந்த பதினைந்து வருடங்களின் பின்னர், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 15 நாட்கள் தொடர்ச்சியாக விசாரணை செய்ததன் பின்னர் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

ஈபிடிபி கட்சியின் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்த ஊர்காவற்றுறை பிரதேசத்தில் நாரந்தனை பகுதிக்குச் சென்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடத்தியதாக ஈபிடிபி கட்சியின் தீவுப்பகுதி இராணுவ பொறுப்பாளராக இருந்த செபஸ்டியன் ரமேஸ் அல்லது நெப்போலியன், 

தீவுப்பகுதி ஈபிடிபி கட்சியின் பிரதேச சபைத் தலைவர் நடராஜா மதனராஜா அல்லது மதன், ஈபிடிபி கட்சியைச் சேர்ந்த அன்ரன் ஜீவராஜா அல்லது ஜீவன், வேலணை பிரதேச சபைத் தலைவர் நமசிவாயம் கருணாகரமூர்த்தி ஆகிய நான்கு பேருக்கும் எதிராக சட்ட மாஅதிபரினால்,  யாழ் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.



இந்தத் தாக்குதல் சம்பவத்தில் 2 கொலைக்குற்றச்சாட்டுக்களுடன், தமிழ்த்தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த மாவை சேனாதிராஜா, சிவாஜிலிங்கம் உள்ளிட்ட 18 பேருக்குக் கடும் காயம் விளைவித்தமை, 3 வாகனங்களைச் சேதப்படுத்தியமை, சட்டவிரோத கூட்டம் கூடி குற்றம் புரிந்தமை, பொது எண்ணத்துடன் குற்றம் புரிந்தமை உட்பட 47 குற்றச்சாட்டுக்கள் இந்த நான்கு எதிரிகள் மீது சுமத்தப்பட்டிருந்தது. 

இந்த வழக்கில் முதலாம் இரண்டாம் எதிரிகளான நெப்போலியன் மற்றும் மதனராஜா ஆகிய இருவரும் வவுனியா மேல் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டு பிணையில் இருந்த காலத்தில் தப்பியோடி பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருப்பதாக யாழ். மேல் நீதிமன்ற விசாரணையின்போது அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, முதலாம் இரண்டாம் எதிரிகள் இல்லாமலேயே யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் 15 நாட்கள் தொடர்ச்சியாக இந்த வழக்கு விசாரணைகள் நடைபெற்ற நிலையில் மூவருக்கு இரட்டை மரணதண்டனை விதித்து, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார். 





யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்திற்காக சென்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடத்தி, இருவரை படுகொலை செய்ததுடன் 20 பேர் வரை காயமடைந்தனர். 

குறித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூன்று எதிரிகளுக்கும் இரட்டை மரண தண்டனையும் பத்து வருட சிறைத் தண்டனையும் விதிக்க வேண்டும் என்று சட்ட மாஅதிபர் சார்பில் பிரதி அரச சட்டவாதி யாழ். மேல் நீதிமன்றுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

இதனடிப்படையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட குறித்த வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என்று யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தெரிவித்திருந்த நிலையில், குறித்த மூன்று சந்தேக நபர்களுக்கு இன்று இரட்டை மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். 



ஸ்ரீலங்காவில் கடந்த 2001 ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக 2001 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் திகதி தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள்  ஊர்காவற்துறை பிரதேசத்துக்கு சென்றிருந்தனர்.

இதன்போது, ஊர்காவற்துறை – நாராந்தனை பகுதியில் வைத்து அவர்கள் மீது இனந்தெரியாவர்கள் தாக்குதல் மேற்கொண்டனர். 

இந்த தாக்குதலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் இருவர் கொலை செய்யப்பட்டதுடன், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் உட்பட பதினெட்டு பேர் காயமடைந்திருந்தனர். 

இந்நிலையில் கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு, யாழ். மேல் நீதிமன்றத்துக்கு சட்ட மாஅதிபரால் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் பாரப்படுத்தப்பட்டு, அங்கு வழக்கு விசாரணை இடம்பெற்று வந்திருந்தது.

இதற்கமைய குறித்த வழக்கு தற்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், கடந்த 15 நாட்கள் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இருதரப்பு சாட்சி பதிவுகளும் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றைய தினம் இருதரப்பு தொகுப்புரையும் இடம்பெற்றிருந்தது.

இத் தொகுப்புரையின் போதே வழக்கு தொடுநர் தரப்பு சட்டத்தரணியான சட்டமா அதிபர் திணைக்கள பிரதி மன்றாதிபதி நாகரட்ணம் நிஷாந், தனது தொகுப்புரையில் மேற்குறித்த தண்டனையை எதிரிகளுக்கு வழங்க வேண்டும் என நீதிமன்றுக்கு பரிந்துரைத்திருந்தார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற வழக்கு நடவடிக்கையின் போது இரு தரப்பு சட்டத்தரணிகளாலும் தொகுப்புரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.




இதன் முடிவில் நீதிபதி மா.இளஞ்செழியன் இன்றைய தினம் காலை 10.30 அளவில் இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படும் என அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments