Latest News

December 14, 2016

ராஜீவ் கொலை வழக்கு குறித்த பேரறிவாளவன் கேள்விக்கு சிபிஐ பதிலளிக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவு
by admin - 0

 

ராஜீவ் கொலை வழக்கில் உண்மையான சதிகாரர்கள் யார் என்ற பேரறிவாளவன் கேள்விக்கு சிபிஐ பதிலளிக்க வேண்டுமென  இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் சிபிஐ நடத்திய விசாரணைகளின் முழு விவரங்கள் மற்றும் ராஜீவ் கொலை சதி தொடர்பில்  விசாரணை நடத்தி வரும் பல்நோக்கு கண்காணிப்புக் குழுவின் செயல்பாடுகள் குறித்த விவரங்களைத் தாக்கல் செய்யுமாறு கோரி  இவ்வழக்கு தொடர்பில்  ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் வழக்கு  உச்ச நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பில் இன்றைய தினம் விசாரணைகள் இடம்பெற்ற போதே நீதிபதிகள் மேற்படி  உத்தரவினை பிறப்பித்துள்ளனர்.

பேரறிவாளன் சார்பில் ஆஜரான  சிரேஸ்ட  வழக்கறிஞரான  ராஜீவ் தவன்  , ராஜீவ் கொலை தொடர்பில் விசாரணை செய்த சிபிஐ ஒரு தரப்பு சார்ந்த விசாரணையை மட்டுமே நடத்தியது. இந்த கொலையின் பின்னணியில் உள்ள சூழ்ச்சியாளர்கள் குறித்து விசாரிக்கவில்லை. இது தொடர்பில்தான்  பேரறிவாளன் கேள்வி கேட்கிறார்   எனத் தெரிவித்தார்.

இதன்போது  குறுக்கிட்ட நீதிபதி விசாரணை முடிவடைந்துவிட்டது. இன்னும் இதில் வேறு அம்சங்கள் இருக்கிறதா? என எழுப்பிய கேள்விக்கு  பதிலளித்த ராஜீவ் தவன் தடா நீதிமன்றமே இக்கொலையின் உண்மையான சூழ்ச்சியாளர் யார்? என சிபிஐ விசாரிக்குமாறு கூறியுள்ளது என சுட்டிக்காட்டியதனை ஏற்றுக் கொண்ட ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ராஜீவ் கொலையின் உண்மையான சதிகாரர்கள் யார் என்ற பேரறிவாளன் கேள்விக்கு பதிலளிக்க சிபிஐக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்

« PREV
NEXT »

No comments