
பரிசில் தமிழர் ஒருங்கிணைப்பு குழு செயற்பாட்டாளர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த செயற்பாட்டாளர் மாவீர ர் நாளுக்காக லாச்சப்பல் பகுதியில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கிக் கொண்டிருந்த போதே இனம் தெரியாத நபர்களால் வாள்வெட்டுக்கு உள்ளாகியுள்ளார்.
வாள்வெட்டுக்கு உள்ளானவர் ஜெயக்குமார் எனத் தெரியவந்துள்ளது. குறித்த செயற்பாட்டாளர் முள்ளிவாய்க்கால் வரை நின்று போராடிய போராளி என்பதுடன் அவர் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுடன் இணைந்து செயற்பட்டு வந்துள்ளார். தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுடன் இணைந்து செயற்பட்டால் உன்னை வெட்டுவோம் என இரண்டு நாட்களுக்கு முன்னர் செல்பேசி மூலம் வசி என்பவர் முன்னால் போராளிகள் என்ற பெயரில் ஜெயக்குமாருக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்றைய வாள்வெட்டுத் தாக்குதலில் ஈடுபட்ட இருவரின் பெயர்களை கவல்துறையினரின் வாய் முறைப்பாட்டில் ஜெயக்குமார் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments
Post a Comment