கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தியில் நூறு வீத உண்மையும் அடங்கியுள்ளது.
இந்த அறிக்கை யாழ்ப்பாண வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரியினால் கொடுக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட மாணவர்கள் இருவரும் திட்டமிட்டே கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை வெளியிடப்பட்ட பலரது அறிக்கைகள் போல், இச்சம்பவம் தற்செயலாக,உடனடியாக எடுக்கப்பட்ட திடீர் முடிவினால் நடைபெறவில்லை.
நன்கு திட்டமிடப்பட்டு குறித்த பொலிசாரினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுவரை செய்யப்பட்ட புலனாய்வு நடவடிக்கைகளில் வெளியான தகவல்களாவன, சுட்டுக்கொல்லப்பட்ட மாணவனுக்கு துப்பாக்கி வேட்டானது முற்புறமாக இருந்தே வைக்கப்பட்டுள்ளது.
இதனை சட்டவைத்திய அதிகாரியால் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்ட அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன் மாணவர்கள் சுடப்பட்ட நேரத்தில் ஹெல்மற் அணிந்தவாறே மோட்டார் சைக்கிளை ஓட்டியுள்ளனர். ஆயினும் மாணவர்களது தலையின் முன் எலும்பு(Frontal bone)சிதைவடைந்துள்ளது. தலைக்கவசம் அணிந்துள்ளபோது இவ்வாறான எலும்பு உடைவதற்கு சாத்தியங்கள் மிகக்குறைவு.
அத்துடன் மாணவர்களுடைய மண்டையோடுகள் சிதைவு அடைந்ததற்கான ஆதாரங்களே கண்டறியப்பட்டுள்ளதேயன்றி உடைவு ஏற்பட்டதற்கான சான்றுகள் இல்லை. மருத்துவ விளக்கத்தின்படி மாணவர்களுடைய தலையில் சிதைவு ஏற்படுத்தப்பட்டமை பின்வருமாறு அமைகின்றது. அதாவது மிக அருகாக இருந்து, ஒருவருடைய மண்டையோடுகள் மீது பாரம் கூடிய ஆயுதத்தினால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இதற்கும் மேலாக குறித்த மாணவர்கள் கொல்லப்பட்ட இடத்திற்கு முன்பாக உள்ள கடையொன்றில் பொருத்தாப்பட்டிருந்த சிசிரிவி கமராவின் தகவல்கள் மேலும் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது. மாணவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன்னர், அவ்வீதியில் பொலிசார் பல தடவைகள் அங்குமிங்கும் பயணித்துள்ளனர்.
நீண்ட நேரம் காத்திருந்து குறித்த மாணவர்களை குறிவைத்து, மாணவர்கள் வருவதனை அவதானித்ததும், முன்புறமாக இருந்தே சுட்டுக்கொன்றுள்ளனர். எனவே இது தொடர்பாக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீவிர நடவடிக்கையில் இறங்கவேண்டும்.
நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்ட அறிக்கையை, பாராளுமன்ற உறுப்பினர்கள், அறிந்து கொள்வதற்கு இலங்கை சட்டம் இடமளிக்கின்றது. அத்துடன் குற்றவாளிகளாக சந்தேகிக்கப்பட்டவர்களுடைய குற்றங்களை ஊடகங்களில் வெளியிட முடியுமென்பதை சர்வதேச சட்டம் அங்கீகரிக்கின்றது.
திட்டமிட்டு மாணவர்கள் இவ்வாறு கொல்லப்பட்டமைக்கான காரணம் உடனடியாக கண்டுபிடிக்கப்படவேண்டும். இதன் மூலமே யாழ் குடாநாட்டிலுள்ள அனைத்து மாணவர்களது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.
No comments
Post a Comment