வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்கு.
Trinco Aid நிறுவனத்தின் ஏற்பாட்டில் இலங்கை தமிழ் சங்கம் அமெரிக்காவினுடைய நிதியுதவியில் தமிழரின் குரல் இணை அனுசரனையில் உளவள துறையில் நிபுணத்துவம் பெற்ற வைத்திய கலாநிதி எஸ்.சிவதாஸ் அவர்களால் இன்றைய தினம் பயிற்சி கருத்தரங்கு வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய உயர்தர மாணவர்களுக்கு இடம் பெற்றது . பாடசாலை மாணவர்களின் இடைவிலகல், மாணவர்களின் தற்போதய போக்கு , வெளிநாட்டு மோகத்தால் கல்வியில் பின்னடைவு, பல்கலைக்கழக தெரிவிலுள்ள மாணவர்களின் வீழ்ச்சி என்பவற்றை நோக்கமாக கொண்டு இக் கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் திரு T.அமிர்தலிங்கம் வைத்திய கலாநிதி சுதாகரன் , சர்வதேச இந்து இளைஞர் பேரவை தலைவரும் அபிவிருத்தி உத்தியோகத்தருமான திரு,சிவ .கஜேந்திரகுமார் பாடசாலையின் உளவள துணை ஆசிரியர் சிவாகரன் மற்றும் Trinco aid நிறுவனத்தின் ஸ்தாபகர் இராஜக்கோண் ஹரிகரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இக் கருத்தரங்கில் சுமார் 35க்கு மேற்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். இக்கருத்தரங்கின் முடிவில் மாணவர்க ளுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்படடமை குறிப்பிடத்தக்கது
No comments
Post a Comment