Latest News

October 19, 2016

அமெரிக்காவின் THAAD – Terminal High Altitude Area Defense ஏவுகணை எதிர்ப்பு பொறிமுறைமையும் இரசிய, சீன அரசுகளின் பதற்றமும்.!!
by admin - 0

 

உலக ஆயுத வளர்ச்சி, வேகம் பெற்றமைக்கு 2ம் உலகப்போரே பிரதானம் என்றால் அது மிகையாகாது. 

அந்த ஐந்தாண்டு போரின் ஊடாக மனித இனம், அந்த போர் தொடங்கி முடியும் வரை தமது ஒட்டுமொத்த வளங்களையும் போர்த்தளபாட ஆராய்ச்சிக்கும், அதன் உற்பத்திக்குமே பயன்படுத்தி, பல நவீன ஆயுதங்களையும், அதன் மூலம் பெரும் பட்டறிவுகளையும் பெற்றிருந்தது. 

அந்த தொழில்நுட்பங்களின் அதி நவீன வடிவமே உலகின் இன்றைய இராணுவ தளபாட உற்பத்திகளாகும்.! 

2006ம் ஆண்டு இறுதியில் இஸ்ரேலிய அரசு, லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது ஒரு தாக்குதலை ஆரம்பித்தது. அந்த தாக்குதலுக்கு வெளிப்படையாக பல காரணங்கள் கூறப்பட்ட போதும் உண்மையான காரணம் அதுவல்ல.! 

அந்த நேரத்தில் இஸ்ரேலிய இராணுவம், யாரும் உருவாக்காத ஒரு ஆயுதத்தை, அமெரிக்காவின் அனுசரணையுடன் உருவாக்கியிருந்தது. ஆம் அது தான் இரும்பு கூரை (iron dome) என்று அழைக்கப்படுகின்றது. (இது பற்றி முன்னமே நான் பதிவிட்டுள்ளேன்.) 

 

உலகநாடுகள் ஆயுத உற்பத்தியில் முழுமூச்சில் இயங்கிய போது, இஸ்ரேலும் அமெரிக்காவும் எதிரிநாட்டு ஏவுகணைகளை வானிலேயே வைத்து அழிக்கும் பொறி முறைமையில் கவனம் செலுத்தின. 

உலக நாடுகளிடம் “ஏவுகணை எதிர்ப்பு, ஏவுகணைகள் இருந்தபோதும்” சிறிய ரக மோட்டார் மற்றும் ஆட்லறி போன்ற எறிகணைத் தாக்குதலை, அந்த ஏவுகணைகள் மூலம் தடுக்க முடியாது. 

ஏனெனில் இதுபோன்ற எறிகணைகள் எந்தவித கணணிக்கட்டுப்பாடுகள் இல்லாதவை. (வளர்ந்த நாடுகள் சிலவற்றை தவிர பெரும்பான்மையான நாடுகள் மனித காட்டுப்பாடுடைய எறிகணை செலுத்திகளையே இன்றுவரை பாவிக்கின்றன) 

இப்படியான நேரத்தில் தான், எதிரி நாடுகளால் சூழப்பட்ட இஸ்ரேல் மீது PLO, காமாஸ், ஹிஸ்புல்லா போன்ற போராளிக்குழுக்களின் எறிகணைத்தாக்குதலால், இஸ்ரேலியர் நிம்மதியற்ற வாழ்க்கையையே வாழ்ந்து வந்தனர். 

அதற்கு முடிவு கட்டவே இஸ்ரேலிய இராணுவம் “இரும்பு கூரையை” (iron dome) உருவாக்கினார். 

அந்த பொறிமுறைமையை சோதிக்கவே லெபனான் மீது போர் தொடுத்தது.! 

அந்த யுத்தத்தின் போது ஹிஸ்புல்லா போராளிகளின் எறிகணைத்தாக்குதல் அனைத்தும் வானிலேயே வைத்து இஸ்ரேலிய இரும்புக்கூரையால் தடுக்கப்பட்டு வானிலேயே வைத்து அழிக்கப்பட்ட்து. 

ஆயிரக்கணக்கில் லெபனானிய மக்களை கொன்றும், காயப்படுத்தியும் இந்த பொறிமுறையை சோதித்துப்பார்த்தது வல்லரசுகள்.


இந்த பொறிமுறைமையின் வெற்றியை தொடர்ந்து அதே முறைமையை மேம்படுத்தி அமெரிக்க இராணுவம் “தாட்” THAAD ( Terminal High Altitude Area Defense) என்று சுருக்கமாக அழைக்கப்படும் சிறப்பான பொறி முறைமையை உருவாக்கி, இன்று அதை, ஐரோப்பாவிலும், தென்கொரியாவில் நிறுவியுள்ளது. 

இந்தப் பொறிமுறை நிறுவலுக்கு இரசியாவும், சீனாவும் கைகோர்த்து தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றன. 

சரி, இந்த முறைமையில் என்ன சிறப்பு? 

இது எப்படி இயங்குகின்றது? 

இந்த பொறி முறமையின் சிறப்பு என்னவென்றால் 2000km தூரம் வரை வான் எல்லையை கண்காணித்து, எறிகணைகளோ அல்லது குறுந்தூர ஏவுகணைகளோ அல்லது அணுஆயுத ஏவுகணைகளோ எதுவெனினும், இனம் கண்டு வானில் வைத்தே அழித்து விட முடியும்.


அதன் பின் தனது ஏவுகணை மூலம் எதிரிநாட்டை அழிக்கமுடியும். 

எதிரியின் எந்த தாக்குதலும் தம் நாட்டை தாக்காது காக்கமுடியும். 

அடுத்தது இது எப்படி இயங்குகின்றது? 

எதிரி நாட்டு எறிகணையோ அல்லது ஏவுகணையோ ஏவப்பட்டதும் சாட்லைட்டின் உதவியுடன் ராடர் அந்த எறிகணையை இனம் கண்டு அதன் வேகம் மற்றும் அதன் திசை, அது விழுந்து வெடிக்க போகும் இடம் பற்றிய துல்லியமான தகவலை கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பும். 

கட்டுப்பாட்டு மையம் தொடர்ந்து ஏவப்படும் எறிகணைகளை தனித்தனி அலகுகள் மூலம் தொடர்ந்து கண்காணித்தபடி தானியங்கி எதிர்ப்பு ஏவுகணைக்கு கட்டளையை கொடுத்து, அந்த எறிகணையை வழிநடத்தி, எதிரி நாட்டு எறிகணைக்கு அருகில் சென்றதும் தானாகவே அந்த எறிகணை வெடித்து, எதிரியின் எறிகணையையும் வெடிக்கவைக்கும்.


மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த பொறிமுறை, பல பில்லியன் டொலர்களை விழுங்கி உருவாக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் அமெரிக்கா இராணுவ வளர்ச்சியில் முதன்மை நிலையை தக்கவைத்து தன்னை உலகத்துக்கு மீண்டும் நிருபித்துள்ளது. 

இந்த பொறிமுறையால் ஆட்டம் கண்டுள்ள சீனாவும், இரசியாவும் கூட்டுச்சேர்ந்து, இது போன்ற ஒரு பொறி முறையை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. அப்படி உருவாக்கும் வரை அமெரிக்கா தனிக்காட்டு ராஜாதான்.!! 

– ஈழத்து துரோணர்.

« PREV
NEXT »

No comments