Latest News

October 09, 2016

வருட இறுதியில் ஏற்படப்போகும் பயங்கர இயற்கை அழிவுகள் இலங்கையும் சிக்குமா?
by admin - 0

 

இந்த செய்தியை நாம் வெளியிடுவதற்கு முக்கிய காரணம் மக்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள விழிப்பாக எப்போதும் இருப்பதற்கேயன்றி வீணாக புரளியை ஏற்படுத்துவதற்காக அல்ல என்பதை நாம் குறிப்பிட்டப்பின்பே வரும் மாதங்களில் நடக்கவிருக்கும் இயற்கை பேரழிவை குறிப்பிட விரும்புகின்றோம்.

சுமார் 400 வருடங்களில் ஏற்படாத அளவு பயங்கர கனமழையால் அழிவுகளை தமிழ்நாடு சந்திக்கவிருப்பதாகவும் அதில் இருந்து மக்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள சுய பாதுகாப்பிற்காக விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் என்றும் தமிழ் நாட்டை சேர்ந்த பிரபல சோதிடர் ஒருவர் தனது பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ளதையும் அந்த சோதிடரை பேட்டி கண்ட தனியார் தொலைகாட்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இவ்வருட இருதியில் நடைப்பெறவிருப்பதாகவும் குறிப்பாக வரும் ஒக்டோபர் 30ம் திகதிக்குள் ஓர் புயல் தோன்றலாம் எனவும் அதை தொடர்ந்து நவம்பர் மாதம் இரண்டு முறை புயலுடன் கன மழை பெய்வதற்கு அதிக சந்தர்ப்பம் இருப்பதாகவும் மேலும் டிசம்பர் மாதம் முதல் ஜனவரி 15ம் திகதிக்குள் நான்கு முறை பலத்த மழை பெய்து தமிழ் நாட்டில் பல பகுதிகளை தாக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மழையை ஜலப்பிரலயம் என்று குறிப்பிடும் மேற்படி சோதிடர் இதனால் தமிழ் நாட்டின் சென்னை நெல்லை மதுரை சேலம் திருச்சி கோயமுத்துார் போன்ற பகுதிகள் பலத்த பாதிப்பை சந்திக்கலாம் என்பதோடு சில வேலைகளில் நிலநடுக்கமும் ஏற்படவாய்ப்புக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கூற்றை உறுதிபடுத்திக்கொள்ள மேற்படி தொலைகாட்சி நிறுவனம் மேலதிகமாக வானவியல் சாஸ்திர ஆராச்சியாளர் ஒருவரையும் மற்றும் பிரபல பெண் சோதிடர் ஒருவரிடமும் இது சம்பந்தமாக வினவிய போது அவர்களும் இதை உறுதிபடுத்தும் வகையிலேயே தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளார்கள் என்பதும் குறிப்பிட தக்கதாகும்.

இந்த எதிர்வுக்கூறலுக்கு ஆதாரமாக தற்பொழுது சென்னையை அண்டிய கடற்கரை பிரதேசத்தில் வசிக்கும் மீனவ கிராமங்களை சார்ந்தவர்களின் கூற்றுப்படி தற்பொழுது இப் பகுதி கடல் அலைகள் வழமைக்கு மாறாக மிகவும் கொந்தளிப்புடன் காணப்படுவதாகம் அதன் காரணமாக தங்களின் வீடுகள் கடல் அரிப்பால் மிகவும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் இம் மக்கள் இரவு நேரங்களில் அருகில் இருக்கும் பாதைகளிலேயே அச்சத்தின் காரணமாக உறங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.

இப்படியாக தாழமுக்கம் மற்றும் புயல் வங்க கடலிலேயே ஏற்படலாம் என்பதால் அது இலங்கையையும் தாக்கும் ஆபத்தை நம் நாடும் எதிர் கொள்ள அதிக வாய்ப்புக்கள் உருவாகலாம் எனவே நம் நாட்டு மக்களும் சற்று விழிப்பாக இருக்கவேண்டும் என்பதோலேயே இந்த செய்தியை வெளிபடுத்துகின்றோம்.

இதில் முக்கியம் என்ன வென்றால் சோதிடத்தை நம்பும் மக்களே இது நடக்கலாம் என நினைக்கலாம் ஏயைவர்கள் ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் அவர்களின் தனிப்பட்ட முடிவு. நம்புகின்ற மக்கள் விழிப்புடன் இருந்து தாங்களை பாதுகாத்துக்கொள்ள இறைவனை பிராத்தனை செய்வோமாக.


« PREV
NEXT »

No comments