Latest News

October 06, 2016

சுவிஸ் அமைச்சரிடம் தமது கவலையை தெரிவிக்கப்போவதாக சோசலிச ஜனநாயக கட்சி உறுப்பினர் திருமதி தர்சிகா கிருஸ்ணானந்தம் தெரிவித்துள்ளார் ,
by admin - 0

 
சுவிஸ் அமைச்சரிடம் தமது கவலையை தெரிவிக்கப்போவதாக சோசலிச ஜனநாயக கட்சி உறுப்பினர் திருமதி தர்சிகா கிருஸ்ணானந்தம் தெரிவித்துள்ளார் ,

தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் மீதான சித்திரவதை நல்லாட்சியிலும் தொடர்வதாக சோசலிச ஜனநாயக கட்சி உயர்நிலை உறுப்பினர் திருமதி தர்சிகா கிருஸ்ணானந்தம் கவலை தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு கடந்த  (திங்கட்கிழமை) விஜயம் செய்துள்ள சுவிட்ஸர்லாந்தின் நீதியமைச்சர் சைமனேட்டா சொமாருகா அரசியல் தஞ்சக் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டிருக்கும் ஈழத்தமிழ் அகதிகளை மீள் அனுப்பு ஒப்பத்தத்தில் கொழும்பில் இலங்கை அரசுடன் கைச்சாத்திடப்பட்ட மிக முக்கிய உடன்படிக்கை என அவர் குறிப்பிட்டுள்ளார்.



நாட்டின் நிலைமை தற்போது மாற்றமடைந்து ஜனநாயகம் ஏற்பட்டுள்ளபோதும், பயங்கரவாத தடுப்புச் சட்டத்திலிருந்து இளைஞர்கள் விடுவிக்கப்படவில்லை அங்கு தொடர்ந்து கைதுகள் அச்சுறுத்தல் இடம்பெறுகின்றது ,

மேலும், வடக்கில் இராணுவ பிரசன்னம் தொடர்ந்தும் அதிகமாக காணப்படுவதாக சுட்டிக்காட்டிய தமிழ் மக்களின் காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்திருப்பதோடு அதில் விவசாயங்களை மேற்கொண்டு வருவதாகவும் இவ்வாறான விடயங்களை சுட்டிக்காட்டிய சுவிட்சலந்தில் அகதித் தஞ்சம் கோரியுள்ள தமிழர்களை திருப்பி அனுப்புவது அவர்களுக்கு பாதுகாப்புஅற்ற நிலையை உருவாக்கும் என்பதுடன் மனித உரிமையை மதிக்கும் நாடு இவ் விவகாரங்களில் அதி உச்ச கவனம் எடுக்க வேண்டும் என அவர் சுட்டுகாட்டியுள்ளார் ,

அரசியல் தஞ்சக்கோரிக்கை நிகரிக்கப்பட்ட தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் நாடு கடத்தப்படும் அபாயம் எழுந்துள்ளது ,

 இந்த உடன்படிக்கை ஊடாக சுவிஸ்சர்லாந்தில் இருந்து நாடு கடத்தப்படும் அரசியல் தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு இலங்கையில் பாதுகாப்பு  உத்தரவாதம் வழங்கப்படும் என்பது கேள்விக்குறியை இது தொடர்பாக நீதி மற்றும் காவல்துறை அமைச்சர் சிமோனெட்டா சோம்மருகாவிடம் பத்திரிக்கையாளர் மாநாட்டில் தமது கோரிக்கையை முன்வைக்கபோவதாகும் புலம்பெயர் அமைப்புக்கள் ஆதரவுக்குரல் எழுப்ப முன்வரவேண்டும் எனவும் தர்சிகா குறிப்பிட்டுள்ளார் ,
« PREV
NEXT »

No comments