Latest News

October 24, 2016

சமஷ்டி தீர்வே தமிழர்களுக்கு தீர்வைத்தரும் - லண்டனில் சீ.வி விக்னேஸ்வரன்
by admin - 0



 

பாராளுமன்ற தேர்தல்கள் நடந்தேறி தற்போது இருகட்சிகள் ஒரு அரசாங்கத்தை நடத்தி வருகின்றன என வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

லண்டனில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

 

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த போது,

தமிழ் மக்கள் பேரவை என்ற தமிழ் பேசும் குழுவினர் மக்களின் கரிசணைகளையும் எதிர்ப்பார்ப்புகளையும் வெளிப்படையாக கொண்டுவரும் விதத்தில் செயற்பட்டு வருகிறது. சென்றமாதம் அவர்கள் நடத்திய மாபெரும் பேரணியில் தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலரும், தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் மற்றும் மற்றைய சில கட்சிகளின் தலைவர்களும், உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

 

அந்த வகையில் தமிழ் மக்கள் பலரின் ஒன்றுபட்ட கருத்துக்கள் பலவெளிவருகின்றன.

சுனாமி ஏற்பட்ட காலப்பகுதியில் விடுதலைப்புலிகளும் இராணுவத்தினரும் பகையை மறந்து ஒற்றுமையாக செயற்பட்டனர். பின்னர் பழைய குருடி கதவை திறடி என்ற நிலைக்கு வந்துவிட்டனர்.

மூன்று கருத்துக்களை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்,முதலாவது தமிழ்ப்பற்று, இரண்டாவது செய்நன்றி மறக்காத மக்களாக அடையாளம் காணப்படல், மூன்றாவது விதண்டாவாதத்தை தவிர்ப்பது.

இவற்றை பின்பற்றினால் மட்டுமே தமிழ் மக்களின் வாழ்க்கை முறை சிறப்பாக அமையும்.

 

தனிப்பட்ட காரணங்களுக்காக பலர் வேற்றுமை பாராட்டி நாட்டு மக்களின் அமைதியை சீர்குலைக்க எண்ணுகிறார்கள். அதற்கு உதாரணமே இந்து கோயில்கள் இருக்கும் இடங்களில் விகாரைகளை அமைக்க திட்டமிடப்பட்டு வருவது.

சமஷ்டி முறையிலான அரசியலமைப்பு மட்டும் தான் எம்முடைய நல்வாழ்வுக்கு வழிவகுக்கும் என சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


« PREV
NEXT »

No comments