Latest News

September 15, 2016

சுவாதியைக் கொன்று விட்டுத் தப்பியது பைக்கில் வந்த இருவர்?.. புதுத் தகவலால் பரபரப்பு!
by admin - 0

சென்னை: இளம் பெண் சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் கைது செய்யப்பட்டாலும் கூட அரசுத் தரப்பைத் தவிர மற்ற அனைவருமே ராம்குமார் கொலையாளி இல்லை என்றுதான் கூறி வருகின்றனர். இதுதொடர்பாக பல்வேறு புதுப் புதுத் தகவல்களும் வெளியாகிய வண்ணம் உள்ளது. இந்த நிலையில் சுவாதியைக் கொலை செய்து விட்டுத் தப்பியதாக இருவரைப் பிடித்து ரகசியமாக போலீஸார் விசாரித்து வருவதாக ஒரு புதுத் தகவல் வெளியாகியுள்ளது.

இன்போசிஸ் சாப்ட்வேர் என்ஜீனியர் சுவாதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஜூன் 24ம் தேதி காலையில் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொலை செய்ததாக ராம்குமார் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இருப்பினும் கொலையாளி இவர் இல்லை என்று பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். இதுதொடர்பாக புதுப் புது தகவல்களும் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் சுவாதியைக் கொன்று விட்டு 2 பேர் பைக்கில் தப்பியதாக ஒரு தகவல் முன்பு உலா வந்தது. தற்போது அந்த பைக் நபர்களைப் போலீஸார் பிடித்து விட்டதாகவும் அவர்களிடம் விசாரணை நடந்து வருவதாகவும், ஆனால் அதிகாரப்பூர்வமாக இதுகுறித்து தகவல் தெரிவிக்காமல் விசாரணை நடத்தி வருவதாகவும் ஒரு புதுத் தகவல் கூறுகிறது.

  • பைக்கில் வந்த இருவர்

    நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்துக் கொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் ரயில் நிலையத்திலிருந்து 2 பேர் தப்பிச் சென்றனர். அவர்கள் பைக்கில் சென்றது சிசிடிவி கேமராக்களிலும் பதிவாகியுள்ளது. அவர்கள் கொலையாளிகளாக இருக்கலாம் என்றும் சந்தேகம் கிளப்பப்பட்டது.

  • யார் அவர்கள்

    இந்த நிலையில் அவர்களை போலீஸார் பிடித்து ரகசியமாக விசாரித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் போலீஸ் தரப்பில் இதுகுறித்து எந்தத் தகவலும் இல்லை. அவர்கள் யார், உண்மையில் அவர்கள்தான் குற்றவாளிகளா என்பது தெரியவில்லை.

  • லேப்டாப்பில் ஆய்வு

    இதற்கிடையே, சுவாதி இந்தியாவின் ரகசியங்களை வெளிநாட்டுக்கு கசிய விட்டார் என்று ஒரு தகவல் உலா வந்து கொண்டிருப்பது குறித்தும் ஒரு விசாரணை நடந்து வருகிறது. இதை மத்திய உளவுப்பிரிவு ரகசியமாக மேற்கொண்டுள்ளதாம். இதுதொடர்பாக சுவாதியின் லேப்டாப்பை அதிகாரிகள் சோதனையிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

  • மன உளைச்சலில் ராம்குமார்

    இந்தப் பின்னணியில் சிறையில் ராம்குமார் பெரும் மன உளைச்சலில் இருப்பதாகவும், யாருடனும் பேச மறுப்பதாகவும் அவரது சார்பில் ஆஜராகி வரும் வழக்கறிஞர் ராமராஜ் கூறியுள்ளார். கோர்ட்டில் விசாரணை வரும்போது போலீஸார் பல கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

  • போலீஸ் தீவிரம்

    இப்படி அடுத்தடுத்து பல சவால்கள் வெடித்துக் கிளம்புவதால் ராம்குமாருக்கு எதிரான அனைத்து ஆவணங்கள், ஆதாரங்கள், சாட்சிகளை போலீஸார் தீவிரமாக சேகரித்து வருகின்றனர். எதிலாவது சொதப்பினால் ஒட்டுமொத்த வழக்கும் தடுமாறிப் போகும் என்பதால் போலீஸ் தரப்பிலும் பதட்டம் இன்னும் தணியவில்லையாம். வருகிற திங்கள்கிழமை ராம்குமாருக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள விசாரணைக்கு வரவுள்ளது.

« PREV
NEXT »

No comments