Latest News

September 19, 2016

30ம் தேதி வரை 10 நாட்களுக்கு வினாடிக்கு 3,000 கன அடி நீர்.. கர்நாடகாவுக்கு மேற்பார்வை குழு உத்தரவு!
by admin - 0

தமிழகத்துக்கு வரும் 21-ந் தேதி முதல் 10 நாட்களுக்கு வினாடிக்கு 3,000 கன அடிநீரை திறக்க கர்நாடகாவுக்கு காவிரி கண்காணிப்புக் குழு உத்தரவிட்டுள்ளது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்துக்கான நீரை கர்நாடகா திறந்துவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தமிழகத்துக்கு முதலில் 15,000 கன அடி நீரை திறந்துவிட உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

12,000 கன அடிநீர் பின்னர் இத்தீர்ப்பை மாற்றி 12,000 கன அடியாக 10 நாட்களுக்கு திறக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி. இதன்படி நேற்று வரை காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட்டது. தமிழகத்தில் சம்பா சாகுபடிக்காக நாளை முதல் மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளது. 

மேற்பார்வை குழு கூட்டம் இந்த நிலையில் டெல்லியில் இன்று நடைபெற்ற காவிரி மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில், கர்நாடகா அணைகளில் போதுமான நீர் இருப்பு இல்லை என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் தமிழக அரசு தரப்பில், உரிய நீரை திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. வெறும் 3,000 கன அடிநீர் இதனை ஏற்று வரும் 21-ந் தேதி முதல் 10 நாட்களுக்கு வினாடிக்கு 3,000 கன அடி நீரை தமிழகத்துக்கு கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்று மேற்பார்வைக் குழு உத்தரவிட்டுள்ளது. நிச்சயம் போதாது ஏற்கனவே உச்சநீதிமன்ற உத்தரவுப்படி திறக்கப்பட்ட 12,000 கன அடிநீரே சம்பா சாகுபடிக்கு போதாது என கூறப்பட்டு வருகிறது. 

தற்போது வெறும் 3,000 கன அடிநீரை மட்டுமே திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது தமிழகத்துக்கு பெரும் ஏமாற்றமாகும். மீண்டும் போராட்ட சூழல் உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்கக் கூடாது என்று கர்நாடகாவில் ஏற்கனவே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கண்காணிப்புக் குழுவின் புதிய உத்தரவால் மீண்டும் கர்நாடகாவில் போராட்டம் வெடிக்கும் நிலை உருவாகி உள்ளது.


« PREV
NEXT »

No comments