Latest News

September 08, 2016

இந்திய விமானங்களை, உடைத்து கழிப்பறைக்குள் போட்டிருப்போம் -ஶ்ரீலங்கா இராணுவத் தளபதி
by admin - 0

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை படையினர் வெற்றிகரமாக வடமராட்சியில்லிபரேசன் ஒப்பரேசன் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்த போது இந்திய சரக்கு விமானங்கள்இலங்கையின் வான் பரப்பில் அத்துமீறி நுழைந்தமை, இலங்கையின் படையினருக்குஆத்திரத்தை ஏற்படுத்தியது என்று இலங்கையின் படைத்தளபதி ஒருவரான மேஜர் ஜெனரல் கமால்குணரட்ன தெரிவித்துள்ளார். 

கடந்த செவ்வாய்க்கிழமையன்று அவர் வெளியிட்ட நந்திக்கடலுக்கான பாதை என்ற நூலில்இந்தக்கருத்து வெளியிடப்பட்டுள்ளது. 

1987ம் ஆண்டு ஜூன் 4ம் திகதியன்று இந்த சம்பவம் இடம்பெற்றது. 

இந்தநிலையில் அன்றையதினம், தமது படையினரிடம் விமானங்களை தாக்கும் ஆயுதங்கள்இருந்திருந்தால், குறித்த இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியிருப்பார்கள். 

அத்துடன் அந்த விமானங்களை, உடைத்து கழிப்பறைக்குள் போட்டிருப்பார்கள் என்றும் அவர்குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இடம்பெற்ற போது தமக்கு மாத்திரமல்ல, முன்னாள் இராணுவஉயரதிகாரிகளான டென்சில் கொப்பேகடுவ, விஜய விமலரட்ன ஆகியோருக்கும் அதிகாரங்கள்இருக்கவில்லை. 

இந்தநேரத்தில் தாம் உட்பட்ட படையினருக்கு ஏற்பட்ட ஆத்திர மிகுதியை சொற்களால்வடிக்க முடியாது என்றும் கமால் குணரட்ன குறிப்பிட்டு;ள்ளார். 

இந்தியாவின் இந்த செயலானது இலங்கையர்களை சாதி குறைந்தவர்கள் என்றஅடிப்படையில் போன்று அமைந்திருந்தது என்றும் அவர் தமது நூலில் தெரிவித்துள்ளார். 

இந்திய இலங்கை உடன்படிக்கையானது, இலங்கையின் குரல்வளையை நசுக்குவதை போன்றுஅமைந்திருந்ததாக தெரிவித்துள்ள கமால் குணரட்ன, ஒருநாள் இந்தியா, விடுதலைப் புலிகளிடம்இருந்து நல்ல பாடத்தை படிக்கவேண்டும் என்று படையினர் பிரார்த்தித்தாகவும்தெரிவித்துள்ளார்.

« PREV
NEXT »

No comments