Latest News

September 26, 2016

நீதியை நிலைநாட்டிய பிரித்தானிய நீதிமன்றம்- ஜூலை கலவரத்தை முன்னிலைப்படுத்தி சிங்கள ஊடகவியாளருக்கு கிடைத்த நீதி தமிழர் பெருமை கொள்ளும் செய்தி
by admin - 0

பிரித்தானிய ஒளிபரப்பு கூட்டுத் தாபனம்(BBC) 50,000 ஆயிரம் பவுண்டுகளை நஷ்ட ஈடாக கொடுக்கவேண்டும் என்று லண்டன் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. 
 

இதன் காரணம் என்ன என்று கேட்டால் தமிழர்கள் ஆடிப்போய் விடுவார்கள். பிரித்தானிய ராஜ குடும்பத்தில் பிறந்த குட்டி இளவரசர் ஜோர்ஜ் பிறந்த நாள் நிகழ்வுகளை முன் நிலைப்படுத்தி நிகழ்ச்சியை தயாரித்து வெளியிடுமாறு பண்டார என்னும் சிங்கள ஊடகவியலாளரை BBC நிர்வாகிகள் பணித்திருந்தார்கள். 

ஆனால் தமிழர்களோடு மிக மிக நெருக்கமாக இருக்கும் அவர் ஜூலை தமிழ் கலவர நாளை முன் நிலைப்படுத்தி நிகழ்ச்சியை தயாரித்து ஜூலை மாதம் வெளியிட்டார்.


இதனால் ஆத்திரமடைந்த BBC நிர்வாகிகள், அவர் மேல் வீண் பழிகளை சுமத்தி இறுதியாக வேலையில் இருந்து நிறுத்திவிட்டார்கள். இதனை எதிர்த்து பண்டார பிரித்தானிய நீதிமன்றில் வழக்கு தொடுத்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், BBC இன ரீதியாக பக்கச் சார்பாக நடந்துள்ளது என்பதனை அறிந்தது மட்டுமல்லாது. நஷ்ட ஈடாக 50,000 பவுண்டுகளை பண்டாரவுக்கு கொடுக்க வேண்டும் என்றும் பணித்துள்ளார்கள். பண்டார என்னும் சிங்கள ஊடகவியலாளர் தமிழர்களின் ஒரு நல்ல நண்பராக திகழ்ந்து வருவதும். மாவீரர் தினங்களை முன் நிலைப்படுத்தி செய்திகளை வெளியிட்டு. சிங்கள மக்களுக்கு தமிழர்களின் போராட்டம் நியாயமானது என்பதனை புரியவைக்கவும் முனைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம்.
2009ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற தமிழர்களின் பாரிய போராட்டங்களில் இவர் பங்குபற்றி பல புகைப்படங்களை எடுத்து BBC இல் வெளியிட்டு தமிழர்களின் போராட்டங்களை உலகறியச் செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
« PREV
NEXT »

No comments