Latest News

September 21, 2016

பிரித்தானியாவில் களைகட்டவிருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுப்போட்டிகள்
by admin - 0

உலகம் எங்கும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் மக்கள் தமக்கு தமிழீழம் கிடைக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அதற்கேற்ப அதனை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு வகையிலும்இயங்கி வருகின்றார்கள்.
இவ்மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி ஈழத்தமிழரின் ஒற்றுமையையும் பலத்தையும் பன்மடங்கு அதிகரித்து புலத்திலும் ஈழத்தமிழரின் திறமையை நிரூபிக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும்.
அதற்கிணங்க புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கக்கூடிய தருணங்களை உருவாக்க வேண்டியது அவசியமானதாகும்.
அவற்றுள் விளையாட்டு என்பது மிகவும் பொருத்தமானதாகவும் சமூகத்தின் எல்லா அங்கத்தவர்களையும் வயது வேறுபாடின்றி ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் இணைத்துக்கொள்ள உதவும் ஒரு சிறந்த மற்றும் பொதுவான ஊடகமாகவும் விளங்குகின்றது.
தற்போது உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் மக்கள் விளையாட்டுப்போட்டிகளை தாம்வசித்த கிராமங்கள் மற்றும் பாடசாலைகள் வாரியாக உலகம் தோறும் நடாத்தி வருகின்றார்கள்.
இதனை ஒரு அடித்தளமாகக் கொண்டு எல்லோரையும் ஒருங்கிணைக்கும் வகையிலான பொது விளையாட்டுப் போட்டிகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உலகரீதியாக ஒழுங்கு செய்துள்ளது.
அதன் முதல் கட்டமாக இந்த விளையாட்டுப்போட்டி கனடாவில் நடாத்தப்பட்டது. மேலும் இப்படியான விளையாட்டுப்போட்டிகளை பலவருடங்களாக வடஅமெரிக்காவில் குறிப்பாக நியூயோர்க்கிலும் சென்ற வருடம் பிரித்தானியாவிலும் நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் பிரித்தானிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தியாக தீபம்லெப். கேணல் திலீபன் ஞாபகார்த்தமாக ஒவ்வொரு வருடமும் கோடை காலத்தில் விளையாட்டு விழா ஒன்றினை நடாத்த திட்டமிட்டு கடந்த வருடம் முதன்முறையாக வெற்றிகரமாக நடாத்தியமை அனைவரும் அறிந்ததே.
இதனைதொடர்ந்து இரண்டாவது தடவையாக இந்த வருடம் 25 செப்டம்பர் 2016 அன்று Morden park, London road, SM4 5HE எனும் இடத்தில்நடாத்த திட்டமிட்டு அதற்கான ஆயத்தங்கள் இனிதே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
இவ்விளையாட்டு விழா பிரித்தானியாவில் வசிக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை மற்றும்சமூக நல உதவிஅமைச்சர் திருசொக்கலிங்கம் யோகலிங்கம் தலைமையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மற்றைய அமைச்சர்களினதும் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் மற்றும் நூற்றிற்கும் மேற்பட்ட செயற்பாட்டாளர்களினதும் ஒத்துழைப்புடன் ஒழுங்கமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
புலம்பெயர்ந்து உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்களை ஒன்றிணைப்பதற்காகவும் எம்மினத்தின் விளையாட்டு வீர வீராங்கனைகளின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவும் எமது பாரம்பரியம் அடையாளம் மற்றும் வரலாறு ஆகியவற்றை ஒருமுறை எமக்கு மீண்டும் நினைவுபடுத்திக்கொண்டு அதனை எமது இளையதலைமுறைக்கு எடுத்துக்காட்டுவதற்காகவும் இவ்விழா ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.




அத்துடன் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களுக்கான ஜனநாயக அரசாக விளங்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தமிழீழத்தை அடைவதற்கான செயற்பாடுகளிற்கு சிறிதளவேனும் நிதியை திரட்டிக் கொடுக்கவேண்டிய கடப்பாடும் காணப்படுகின்றது.
இவ்விழாவானது காலை ஒன்பது மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் ஏழுமணியளவில் நிறைவுபெறும். முதற்கட்டமாக தமிழரின் பாரம்பரியவாத்திய இசையாம்பறை இசையுடன்அணிவகுப்பு இடம்பெற்று விருந்தினர்கள் விழாவிற்கு அழைத்து செல்லப்படுவர்.
அங்கே ஈழத்தமிழரின் தேசியக்கொடி உரியமரியாதையுடன் ஏற்றப்பட்டு கொடிவணக்கம்செலுத்தப்பட்டு தேசியகீதம் பாடப்பட்டு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு விழா இனிதே ஆரம்பமாகும்.
அதனைதொடர்ந்து பிரதம விருந்தினரின் வாழ்த்துச்செய்தியுடன் விளையாட்டு நிகழ்வுகள்ஆரம்பமாகும். இவ்விழாவில் உதைபந்து, கிரிக்கெட், கைப்பந்து, வலைப்பந்து ஆகிய நவீன விளையாட்டுக்களும் கிளித்தட்டு மற்றும் கயிறிழுத்தல் போன்ற தமிழரின் பாரம்பரிய விளையாட்டுக்களும் இடம்பெற இருக்கின்றன. அத்துடன் சிறுவர்களுக்கான பலவிளையாட்டுக்களும் பொழுது போக்கு நிகழ்வுகளும்இடம்பெறும்.
தாயக உணவுகளும் மென்பானங்களும் விற்கப்படும். மாலை ஐந்து மணியளவில்அதிஷ்டலாபசீட்டு குலுக்கல்இடம்பெறும். வெற்றி பெற்றவர்களுக்கும் அணிகளுக்கும்பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்படுவதுடன் உரியவர்களுக்கு வெற்றிகிண்ணமும் கேடயமும் வழங்கப்படும். இவ்வாறாக நன்றிநவிலலுடன் விழா இனிதே நிறைவுபெறும்.
ஈழத்தமிழ்மக்களின்ஒற்றுமையைகட்டிஎழுப்பும்பொருட்டுஉலகெங்கும்வாழும்அனைத்துஈழத்தமிழ்மக்களையும்முக்கியமாகபிரித்தானியாவில்வசிக்கும்ஈழத்தமிழ்மக்களையும்மற்றும்அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
அத்துடன்வியாபாரநிறுவனங்கள்மற்றும்அனுசரணையாளர்களைமுன்வந்துஎமக்குஅனுசரணைவழங்கும்படிகேட்டுக்கொள்கின்றோம். இவ்விழாவைஇனிதேநடாத்துவதற்குஉங்கள்அனைவரதுஆதரவையும்இ பங்களிப்பையும் ஊக்குவிப்பையும்வேண்டி நிற்கின்றது பிரித்தானிய நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்.
« PREV
NEXT »

No comments