Latest News

August 24, 2016

நடக்கவிருக்கும் பொங்குதமிழை தடுக்க கூட்டமைப்பு முயற்சியா?
by admin - 0

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்கூட்டம் கொழும்பில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்து கொண்ட கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மிகுந்த பதட்டத்துடன் காணப்பட்டார்.
கூட்டத்தின் தொடக்கத்தில் உரையாற்றிய சம்பந்தன் இப்போது யாழ்ப்பாணத்தில் என்ன பிரச்சினை இருக்கிறது?
எதற்காக மக்கள் போராட்டத்திற்கு திட்டமிடுகிறார்கள்?
என்ற கேள்வியை பாராளுமன்ற உறுப்பினர்களை நோக்கி கேட்டதற்கு சுமந்திரனும் மாவை சேனாதிராசாவும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் இந்த பேரணியை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறினர்.
அதில் தொடர்ந்து கருத்து தெரிவித்த சுமந்திரன் அது என்ன பொங்குதமிழ் மீண்டும் புலிகளுக்கு உயிர் கொடுக்கும் இந்த திட்டத்தை ஒருபோதும் எற்றுக்கொள்ளக் கூடாது என்றும்,தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் இந்த பேரணிக்கு ஆதரவு வழங்கக் கூடாது என்றும் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து சிவசக்தி ஆனந்தன் சுமந்திரனின் கருத்தை எதிர்த்து அப்படி மக்கள் போராட்டத்தை தடை செய்யக்கூடாது என்றும் தற்போது சிங்கள பேரினவாதத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாடுகளே இவ்வாறான மக்கள் போராட்டங்களிற்கு காரணம் என்றும் தெரவித்தார் .
இதன் போது குறுக்கிட்ட சம்பந்தன் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் எப்படி அதைச் செய்ய முடியும் என்று கேள்வியெழுப்பியதுடன் இன்னும் இரண்டு மாதங்களில் ஒரு தீர்வுத்திட்டம் வரப்போகிறது இந்த நேரத்தில் இதனை செய்யவிடக்கூடாது.
என்றார் இதற்குப் பதிலளித்த சிவசக்தி ஆனந்தன் யாழ்ப்பாணத்தில் நடத்த விடக்கூடாது என்று கூறும் நீங்கள் ஏன் நேற்று முன்தினம் கிளிநொச்சியில் மக்கள் போராட்டத்தை ஏற்பாடு செய்தீர்கள்? அது அரசாங்கத்தை ஆத்திரப்படுத்தாதா? என்றார் உடனே குறுக்கிட்ட சிறிதரன் அந்தப்போராட்டத்தை நாங்கள் நடத்தவில்லை அது பொது அமைப்புக்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் என்றார்.
அப்போது சுமந்திரன் நையாண்டியாக சிறிதரனைப்பாரத்து எப்போது உங்களுடைய பெயரை மாற்றினீர்கள் என்று சபையில் உள்ளோரை சிரிக்கச்செய்ய உசாரடைந்த சம்பந்தன் இப்ப உங்களையெல்லாம் இங்க சிரிக்க வரச்சொல்லேல இந்த போராட்டத்தை எப்படி தடுக்கலாம் என்று எனக்குச் சொல்லுங்கள்.
அரசாங்கத்திற்கு என்னால் பதில் சொல்ல முடியாமல் உள்ளது என்றார். உடனே சுமந்திரன் நாளை(25.08.2016) கூட்டமைப்பின் தலைவர்களை அழைத்து இதற்கான அவசர ஒன்று கூடல் ஒன்றை நடத்தி அதனூடாக போராட்டத்தை உடனே நிறுத்துவதற்கு ஆலோசனை வழங்குமாறு சம்பந்தனுக்கு அறிவுரை கூறினார்.
இதையடுத்து நாளை கூட்டமைப்பின் தலைவர்கள் சந்திக்கும் கூட்டத்திற்கு கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments