Latest News

August 25, 2016

ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்த இயக்குனர் சேரனை நினைக்கும் போது எமக்கு அருவருப்பாக இருக்கிறது!!--வல்வை அகலினியன்!
by admin - 0


"ஈழத்தமிழர்கள் திருடர்கள், இவர்களுக்காக போராடியதை நினைக்கையில் அருவருப்பாக இருக்கிறது என்றார் இயக்குனர் சேரன். இயக்குனரும், நடிகருமான சேரன் இலங்கை தமிழர்களுக்காக போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், தயாரிப்பாளர்கள் திருட்டி டிவிடியால் கஷ்டப்படுவதை பற்றி பேசியுள்ளார். தமிழ்நாட்டில் 18 ஆயிரம் திருட்டு டிவிடி கடைகள் இருக்கின்றன. பர்மா பஜாரில் இருக்கிற அத்தனை கடைகளிலும் திருட்டு டிவிடி விற்கிறார்கள், போலீசும் அதை கண்டுகொள்ளவில்லை. தமிழ், தமிழன்னு நாம் சொல்றபோது அப்படியே உணர்வுகள் பொங்கி எழுது. ஆனா அந்த தமிழன் தான் இந்த மாதிரி வேலையெல்லாம் பார்த்துக்கிட்டிருக்கான் என்று அறிந்ததும் அதிர்ச்சியாக இருந்தது. இந்த மாதிரி திருட்டுத்தனமா படத்தை ஆன்லைனில் வெளியிடுறவங்க இலங்கை தமிழர்கள் அப்படினு சொல்றாங்க. இலங்கை தமிழர்களுக்காக நாம திரையுலகமே ஒன்றுசேர்ந்து குரல் கொடுத்து போராடி இருக்கோம். அவர்களில் சிலர் தான் இதை பண்றாங்கன்னு கேள்விப்படுகிறபோது, ஏண்டா இவர்களுக்காக இதை பண்ணினோம் என அருவருப்பாக இருக்கிறது என பேசியுள்ளார் சேரன்." இது செய்தி.... இதே சேரனிடம் ஈழத்தமிழர்கள் சார்பாக சில கேள்விகளும், சில விளக்கங்களும். ஈழத்தமிழர்கள்தான் திருட்டுத்தனமாக தென்னிந்திய தமிழ்த் திரைப்படங்களை திருட்டு டிவிடி ஊடாக வெளியிடுகிறார்கள் என்றால்... அதற்குரிய அனைத்துவிதமான ஆதாரங்களையும் வைத்துக் கொண்டல்லவா பேச வேண்டும்?? எந்தவிதமான ஆதாரங்களுமின்றி ஒட்டுமொத்த ஈழத்தமிழ் இனத்தையே "திருடர்கள்" என்று சொல்வது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதற்குரிய எதிர்விளைவுகளை ஈழத்தமிழர்களிடத்தில் இருந்தும், தமிழகத் தமிழர்களிடம் இருந்தும் மிக விரைவில் சேரன் எதிர்கொள்ள வேண்டி வரும். ஒரு இனம் அழியும் தருவாயில்தான் திரைப்படத்துறையினராகிய நீங்கள் காலை நேர உணவின் பின் ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதப் போராட்டம் இருந்தீர்கள். மதியம் மட்டுமே உணவருந்தவில்லை. பின் மாலை உண்ணாவிரதம் முடித்த கையோடு வீட்டில் இரவு நேர உணவு. இதுதான் உங்கள் போராட்டமா...? என்று நாம் எண்ணுமளவிற்கு சேரனின் பேச்சு எம் அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது. ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதப் போராட்டம் மட்டுமே நீங்கள் இருந்தீர்கள் இதைவிட வேறு எந்தவிதமான போராட்டமும் நீங்கள் செய்ததில்லை..! உங்கள் போராட்டத்தால் எதுவும் அங்கு நடந்திடவில்லை. எந்த மாற்றமும் அங்கு ஏற்படவுமில்லை!!! ஒற்றை உயிரைக் கூட உங்களால் காப்பாற்றவும் முடியவில்லை!!! பிறகென்ன நீங்கள் போராடியதால் உங்களுக்கு அருவருப்பாக உள்ளது.??? உங்கள் அருவருப்பால் அங்கு ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்கள் மடிந்து போனதுதான் மிச்சம்!! ஒரு சிலர் செய்வதற்குரிய வாய்ப்புக்கள் இருந்தாலும் (இதுவும் உண்மையல்ல) ஒட்டு மொத்த ஈழத்தமிழரையும் கேவலமாக நினைக்கக்கூடாது!!! அத்தோடு, தமிழகத்தில் அனைத்து டிவிடி கடைகளிலும் வாடகைக்கு விடப்படும் டிவிடிகள் அனைத்தும் அந்தந்த ஏரியாவில் உள்ள திரையரங்குகளில் திருட்டுத் தனமாக பதிவு செய்யப்பட்டவையே!!.. இதற்கு திரையரங்கத்தில் உள்ள பட ஓட்டுனரும் உடந்தையே!! சென்னையில் திருட்டுத்தனமாக டிவிடி பதிவு செய்யப்படும் பல இடங்கள் இருக்கின்றன. பல திரைப்படங்களில் திருட்டு விசிடி பற்றி காட்சிகளாக்கி உள்ளார்கள்.. ஏன் சூர்யாவின் அயன் படத்திலும் திருட்டு விசிடி சம்மந்தமான காட்சிகள் உண்டு. ஈழத்தமிழர்கள்தான் தென்னிந்திய திரைப்படங்களை அதிக விலை கொடுத்து வாங்கி உலகமெங்கும் ஓட வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் ஒரு போதும் மறந்துவிடக்கூடாது! பல நூறு கோடி ரூபாய் செலவில் படம் எடுப்பதற்கும் தற்போது ஈழத்தமிழர்தான் தேவையாக உள்ளது, உதாரணமாக லைக்கா மற்றும் ஐங்கரன் இன்டர்நேசனல் நிறுவனங்களே. உங்கள் திரைப்படங்களை பல நூறு கோடி ரூபா செலவில் படமெடுப்பதற்கு தமிழக தயாரிப்பாளர்கள் பின் நிற்கும் போது ஈழத்தமிழர்கள்தான் முன்னின்று தாயாரிக்கிறார்கள் என்பதையும் மறந்து விடக்கூடாது! தற்போது ரஜினி நடித்து வரும் எந்திரன் 2 திரைப்படத்திற்கு 300 கோடி ரூபா பொருட்செலவில் ஈழத்தமிழனின் லைக்கா நிறுவனம்தான் தாயாரிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆகவே, நன்றி கெட்டத்தனமாக சேரன் பேசக்கூடாது!!! அதுசரி, சேரன் அவர்களே...! ஈழத்தமிழர்களுக்காக நீங்கள் போராடி ஒரு உயிரையாவது காப்பாற்றிய வரலாறு உண்டா...??? அல்லது ஈழம்சார்ந்த ஒரு திரைப்படமாவது எடுத்த வரலாறு உங்களுக்கு உண்டா? சும்மா வசனம் பேசுவதற்கு இது ஒன்றும் சினிமா இல்லை.. ஈழத்தமிழர்களின் வீர வரலாறு வேறுவகையானது! புதிய திரைப்படங்களை திருட்டுத் தனமாக வெளியிடும் இணையமான www.thiruttuvcd.com என்ற இணையத்தளம் தமிழகத்திலேதான் இயங்குகிறது. ஈழத்தமிழர்கள் அவர்களது பேச்சிலும்… எழுத்திலும் “திருட்டு” என்கிற வார்த்தையை “களவு” என்றுதான் சொல்லுவார்கள்… ஒரு போதும் “திருட்டு” என்கிற வார்த்தையை பயன்படுத்தியதில்லை! உங்கள் திரைப்படங்களின் வெளிநாட்டு உரிமைகளை பல கோடிகள் கொடுத்து வாங்கி இன்று கூட தமிழக நடிகர்களின் கோடிக்கணக்கான சம்பளங்களை நிர்ணயிக்கும் வரிசையில் ஈழத்தமிழரே உள்ளனர். நீங்கள் எப்போதாவது ஈழத்தமிழர்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என போராடிய சரித்திரம் உண்டா? தமிழகத் திரைப்படத் துறையினரில் ஒரு சிலரைத் தவிர மீதி அனைவரும் 2009 ஆம் ஆண்டின் பிற்பாடு முள்ளிவாய்க்காலில் நம் உறவுகள் துடிக்கத் துடிக்க கொன்று அழிக்கப்பட்ட பின்புதான் ஆடிக்கு ஒரு தடவையும்…. ஆவணிக்கு ஒரு தடவையும் போராட்டம் செய்கிறீர்கள்… தமிழக இளைஞர்கள்… மாணவர்களுடன் தமிழகத்தின் அடிமட்டத் தொண்டர்களான சராசரி பொதுமக்கள்தான்… இன்று வரையும் தமிழீழ விடுதலைக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து போராடி வருகிறார்கள்.. மாணவர்கள் போராட்டம் பற்றி நெகிழ்ந்து நடிகர் கமல்ஹாசன் அவர்களே பாராட்டி திரைப்படத் துறையினரானவர்கள்… மாணவர்கள் போராட்டத்தைக் குழப்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார். முதலில் திரைப்பட நடிகர்கள் அனைவரும் உங்களின் கோடிகளான சம்பளத்தை குறையுங்கள்…. அப்போதுதான் திரையரங்குகளில் டிக்கெட் விலை மிகவும் குறையும்! டிக்கெட் விலை குறைந்தால் அனைத்து திரைப்பட ரசிகர்களும் திரையரங்கு தேடி வந்து உங்கள் திரைப்படத்தை ரசிப்பார்கள்!! இனியும் ஈழத்தமிழர்களை நீங்கள் இப்படி கீழ்த்தரமாக விமர்சிப்பீர்களாக இருந்தால், தமிழர்கள் வாழுகின்ற எந்தவொரு நாட்டிற்கு சென்றாலும்…. அதற்குரிய விருதினை நிச்சயமாக வாங்கியே தீர வேண்டும்!!!! எமக்காக நீங்கள் உண்ணாவிரதப் போராட்டம் இருந்த போது நாம் அனைவரும் பெருமகிழ்வு கொண்டோம். எமக்காக தமிழகத் திரைப்படத் துறையினரே எம் பக்கம் உள்ளார்கள் என்று. ஆனால், அதையே உங்கள் தொழில் ரீதியாக பாதிக்கப்பட்டு நஷ்டம் வரும் போது எம்மினத்தைக் காரணம் காட்டி "திருடர்கள்" என்றும், "ஈழத்தமிழர்களுக்காக போராடியது அருவருப்பாக இருக்கிறதென்றும்" சொல்வது, நீங்கள் செய்த சிறு உண்ணாவிரதப் போராட்டத்தை சொல்லிக்காட்டுவது போலாகும்!! இவ்வாறான மகா மோசமான மிகவும் கீழ்த்தரமான அதுவும்கூட தொழில் ரீதியாக நஷ்டம் ஏற்படுகையில் ஈழத்தமிழர்களை கேவலப்படுத்திய சேரனை நினைக்கும் போதுதான்.... "இவரா எமக்காக உண்ணாவிரதம் இருந்தார் என ஈழத்தமிழர்கள் ஆகிய எமக்கு அருவருப்பாக இருக்கிறது"..! - வல்வை அகலினியன் சேரன் பேசிய காணொளி: 
 https://youtu.be/n3WqrM-nifY
« PREV
NEXT »

No comments