
பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும் கதாசிரியருமான பஞ்சு அருணாசலம் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 75. சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் உடல்நலக்குறைவால் உயிர் பிரிந்தது.
இயக்குநர், எழுத்தாளர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர். அன்னக்கிளி, உல்லாசப்பறவைகள் உள்ளிட்ட பல படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார். அன்னக்கிளி படம் மூலம் இளையராஜாவைத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். ரஜினி, கமலைக் கொண்டு அதிகப் படங்களைத் தயாரித்துள்ளார்.
பிரியா, குருசிஷ்யன், மைக்கேல் மதன காமராஜன், ராசுக்குட்டி, வீரா, பூவெல்லாம் கேட்டுப்பார், ரிஷி உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளார். பஞ்சு அருணாசலத்தின் மறைவுக்குத் திரையுலகக் கலைஞர்கள் இரங்கல் தெரிவித்துவருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மறைந்த அருணாசலத்திற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் பஞ்சு அருணாசலத்தின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளா
Panju sir ... I will really really miss you. May your soul rest in peace— Rajinikanth (@superstarrajini) 9 August 2016
No comments
Post a Comment